Header Ads

Header ADS

இந்தியாவில் இளம் வீரர் உற்பத்திக்கு எந்திரம் உள்ளதா; இன்சமாம் வியப்பு

கராச்சி, மார்ச் 29-
இன்சமாம் உல்-ஹக்

இந்தியாவில் இளம் கிரிக்கெட் வீரர்களை உற்பத்தி செய்யும் எந்திரம் உள்ளது என பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் இன்சமாம் உல்-ஹக் வியந்து கூறினார்.

இளம்வீரர்கள் அசத்தல்

இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் சிறப்பாக விளையாடியது. தற்போது முடிந்த இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட், டுவெண்டி20, ஒருநாள் போட்டி தொடர்களையும் கைப்பற்றியது.

இந்த தொடர்களில் ஏராளமான இளம்வீரர்கள் இந்திய அணியில் விளையாடி அசத்தினர். ‛யார்க்கர்’ மன்னன் நடராஜன், முகமது சிராஜ், பிரசித் கிருஷ்ணா ஆகியோர் அறிமுக போட்டிகளில் விக்கெட்டுகள் அள்ளினர்.

சுப்மன் கில், இஷான் கிஷான், சூர்யகுமார் யாதவ், குர்னால் பாண்டியா ஆகியோரும் பேட்டிங்கில் வெளுத்து வாங்கினர். மேலும் ரிஷாப் பண்ட் தனது அதிரடி ஆட்டத்தை தொடருவதோடு, ஷர்துல் தாகூரும் இந்திய அணிக்கு பலமாக உள்ளார்.

இன்சமாம்

இந்நிலையில் இந்திய கிரிக்கெட் அணியில் உள்ள இளம்வீரர்கள் குறித்து பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் இன்சமாம் உல்–ஹக் யூ–டியூப் சேனலில் கலந்துரையாடினார்.

அப்போது அவர் கூறியதாவது:

இளம்வீரர்கள் அருமை

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒவ்வொரு போட்டியிலும் இந்திய அணியை உன்னிப்பாக கவனித்தேன். இளம்வீரர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.

மூத்த வீரர்கள் தங்களுக்கான பங்களிப்பை அணிக்கு வழங்கினாலும் இளம்வீரர்களின் செயல்பாடு பேசும்படியாக உள்ளது.கடந்த 6 மாதங்களாக இந்திய அணியில் இளம்வீரர்களின் செயல்பாடு அருமையாக உள்ளது.

எந்திரம் உள்ளதா

கிரிக்கெட்டில் திறமையான இளம்வீரர்களை உற்பத்தி செய்ய இந்தியாவில் ஏதேனும் எந்திரம் உள்ளது என நினைக்கிறேன். ஏனென்றால் இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் போட்டியிலும் குர்னால் பாண்ட்யா, பிரசித் கிருஷ்ணா என 2 வீரர்கள் அறிமுகமாகி சிறப்பாக செயல்பட்டனர்.

இது மூத்த வீரர்களுக்கான ஒரு எச்சரிக்கை மணி. அதாவது நன்றாக விளையாடினால் மட்டும் தான் அணியில் இடத்தை தக்கவைக்க முடியும் என்பதை மூத்த வீரர்கள் உணர்ந்து செயல்பட வேண்டும்

இவ்வாறு அவர் கூறினார்.

No comments

Powered by Blogger.