ஐ.பி.எல்.லில் புதிதாக 2 அணிகள்: என்ன சொல்கிறது பி.சி.சி.ஐ.
புதுடில்லி, மார்ச் 15-
ஐ.பி.எல். கிரிக்கெட்
ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி அடுத்த மாதம் (ஏப்ரல்) 9ந் தேதி தொடங்கி மே மாதம் 30ந் தேதி முடிகிறது. இதில் சென்னை, மும்பை உள்பட் 8 அணிகள் பங்கேற்கின்றன.
இந்நிலையில் நடப்பு ஆண்டில் கூடுதலாக 2 அணிகள் ஐ.பி.எல்.,லில் பங்கேற்கும் என தகவல் வெளியானது. ஆனால் அது நடக்கவில்லை.
புதிய அணிகள் எப்போது
இருப்பினும் ஐ.பி.எல். அணிகளை 8ல் இருந்து 10 ஆக அதிகரிப்பதில் பி.சி.சி.ஐ. உறுதியாக உள்ளது. நேற்று முன்தினம் நடந்த பி.சி.சி.ஐ. ஆலோசனை கூட்டத்தில் இதுபற்றி விவாதிக்கப்பட்டது.
இந்த கூட்டத்தில் பி.சி.சி.ஐ. தலைவர் சவுரவ் கங்குலி, செயலாளர் ஜெய்ஷா உள்ளிட்டோர் பங்கேற்றனர். கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்ட விஷயங்கள் குறித்து பி.சி.சி.ஐ.யில் அங்கம் வகிக்கும் ஒருவர் கூறுகையில், ‘‘10 அணிகள் பங்கேற்கும் ஐ.பி.எல். கிரிக்கெட் அடுத்த ஆண்டு முதல் நடக்கும். அணிகளை இறுதி செய்தல் மற்றும் வீரர்கள் ஏலம் குறித்த அம்சங்கள் வரும் மே மாதத்துக்குள் இறுதி செய்யப்ப்டும்’’ என்றார்.
#iplnewteams #newteamsfrom2022 #bcci #souravganguly #bccimeeting #IPl #iplstartsfromapril9 #endedmay30 #mumabaiindians #csk #chennaisuperkings
No comments