Header Ads

Header ADS

ஐ.பி.எல். வரவேற்பில் வித்தியாசம்; ‛அஸ் அண்ணா’ ஆன அஸ்வின்


மும்பை, மார்ச் 29-

ஐ.பி.எல். போட்டியில் விளையாடும் வீரர்களுக்கு வித்தியாசமான முறையில் வரவேற்பு அளிக்கப்பட்டு வருகிறது. டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியில் விளையாடும் அஸ்வினை ‛அஸ் அண்ணா’ என வரவேற்று உள்ளனர்.

ஐ.பி.எல். பயிற்சி

ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி அடுத்த மாதம் (ஏப்ரல்) 9–ந் தேதி தொடங்கி மே மாதம் 30–ந் தேதி முடிவடைகிறது. சென்னையில் நடக்கும் முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதுகின்றன.

இதையொட்டி ஐ.பி.எல்.லில் பங்கேற்கும் 8 அணிகளும் பயிற்சியை தொடங்கியுள்ளன. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியினர் தல டோனி தலைமையில் மும்பையில் பயிற்சி மேற்கொள்கின்றனர். பிற அணியினரும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள். இங்கிலாந்து–இந்தியா ஒருநாள் தொடரில் விளையாடும் வீரர்கள் தவிர மற்ற வீரர்கள் தங்களது அணியுடன் இணைய உள்ளனர்.

வித்தியாச வரவேற்பு

கொரோனா பரவலால் பல வீரர்கள் முன்னெச்சரிக்கையாக தனிமையில் உள்ளனர். இந்நிலையில் தனிமைக்காலம் முடிந்து அணியுடன் இணையும் வீரர்களுக்கு அந்தந்த அணியினர் வித்தியாசமான முறையில் வரவேற்பு அளிக்கின்றனர். அதன் விபரம் வருமாறு:


டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியில் தமிழக வீரர் அஸ்வின் இணைந்துள்ளார். இதுபற்றி அந்த அணி தனது டுவிட்டர் பக்கத்தில், ‘டெல்லி பயிற்சி களத்துக்கு வரவேற்கிறோம் அஸ் அண்ணா’ என குறிப்பிட்டது.

தினேஷ் கார்த்திக், கட்டிங்

இதேபோல் தனிமை காலம் முடிவடைந்த நிலையில் கொல்கத்தா அணியில் தமிழக வீரர் தினேஷ் கார்த்திக், ஆஸ்திரேலியாவின் பென் கட்டிங் இணைந்துள்ளனர். இதுபற்றி அந்த அணி தனது டுவிட்டர் பக்கத்தில், ‘தனிமைப்படுத்தலை முடித்து கொண்ட மகிழ்ச்சியோடு பயிற்சியில் இணைந்த இருமுகங்கள்’ எனக்கூறி தினேஷ்கார்த்திக், பென் கட்டிங் படத்தை பகிர்ந்துள்ளனர்.


இதேபோல் அடிப்படை விலையான ரூ.2 கோடிக்கு கொல்கத்தா அணியால் வாங்கப்பட்ட அனுபவ சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன், அந்த அணியில் இணைகிறார். இதுதொடர்பாக, ‘தொடர் வெற்றியை பெற்றவர் இங்கு உள்ளார். பஜ்ஜியின் வருகை நிச்சயம் மகிழ்ச்சியாக உள்ளது’ என அந்த அணி டுவிட்டரில் குறிப்பிட்டுள்ளது.

மேலும் சென்னனையில் பயிற்சி மேற்கொள்ளும் ஐதராபாத் சன்ரைசர்ஸ் அணியில் ஆப்கானிஸ்தான் சுழற்பந்து வீச்சாளர் ரஷித் கான் இணைய உள்ளார். இதுபற்றி அவர் தன்து இன்ஸ்டாவில் குறிப்பிட்டார். ரஷித்கானை வரவேற்ற ஐதராபாத் அணி, தனது டுவிட்டர் பக்கத்தில், ‘சன்ரைசர்ஸ் அணியின் மேஜிக்மேன் ரஷித்கான் வந்து கொண்டிருக்கிறார்’ என கூறியுள்ளது.


No comments

Powered by Blogger.