Header Ads

Header ADS

பும்ரா...! காதலியை கரம் பிடித்தார்...! ‘தமிழகத்தின் மருமகன்’ ஆனார்...!


டில்லி, மார்ச் 15–

இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் பும்ரா, தனியார் டி.வி., நிகழ்ச்சி தொகுப்பாளினி சஞ்சனாவை இன்று திருமணம் செய்து கொண்டார். அவர்களின் திருமண புகைப்படங்களும் வைரலாகி இருக்கின்றன.

‛யார்க்கர்’ நாயகன் பும்ரா

இந்திய கிரிக்கெட் அணியின் ‛யார்க்கர்’ நாயகன் ஜஸ்பிரித் பும்ரா. இவர் ஐ.பி.எல். கிரிக்கெட்டில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக ஆடி வருகிறார். இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வரும் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் அணியில் இடம்பிடித்திருந்தவர் திடீரென விலகினார்.

பும்ராவிற்கு விரைவில் திருமணம் நடைபெற உள்ளது. எனவே தான் அவர் போட்டியில் இருந்து விலகிவிட்டார் என சமூகவலைதளங்களில் செய்திகள் உலா வந்தன. மேலும், ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனலில் விளையாட்டு தொடர்பான நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கும் தொகுப்பாளினி சஞ்சனா கணேசனிடம் தான் பும்ரா தனது இதயத்தை பறிகொடுத்து இருக்கிறார் என்ற தகவலும் கூடுதலாக பரவியது.

காதலியை கரம் பிடித்தார்

ஒரு வழியாக இந்த காதல், திருமணத்தில் முடிந்திருக்கிறது. ஆம், இன்று தன் காதலி சஞ்சனாவை கரம் பிடித்தார், பும்ரா. முன்னதாக கோவாவில் பும்ரா–சஞ்சனாவின் குடும்ப வழக்கப்படி நேற்று திருமண சம்பிரதாயங்கள் நடந்தன. இன்று சிறப்பான முறையில் திருமணம் நடந்தது. விழாவில் இருவீட்டார் மட்டும் பங்கேற்றனர். 

பும்ரா–சஞ்சனா திருமண புகைப்படங்கள் சமூகவலைதளங்களில் வெளியாகி இருக்கிறது. அதில் இருவரும் மிக அழகாக காட்சி அளிக்கின்றனர். புதுமண தம்பதிக்கு கிரிக்கெட் வீரர்கள், ரசிகர்கள் வாழ்த்து மழை பொழிந்து வருகின்றனர்.


யார் இந்த சஞ்சனா

இத்திருமணத்தை தமிழக கிரிக்கெட் ரசிகர்கள் ஒரு படி மேல சென்று சிறப்பாக கொண்டாடுகின்றனர். ஏன் தெரியுமா... சஞ்சனா ஒரு தமிழ்ப்பெண். அவரது தந்தை தமிழகத்தை பூர்விகமாக கொண்டவர். பின்னாளில் புனேயில் ‘செட்டில்’ ஆகிவிட்டார். இத்திருமணம் மூலம் பும்ரா தமிழகத்தின் மருமகன் ஆகி இருக்கிறார். இது போதாதா பும்ராவை நம்மவர்கள் கொண்டாடி தீர்க்க...!

#bumrah #bumrahwedding #bumrahmarriage #bumrahtietheknot #indianbowler #sanjanaganeshan #sanjanamarriage #MI #KKR #starsports #starsportsanchor #starsportssanjana #goamarriage #goa #indiancricketteam #பும்ரா #சஞ்சனா #பும்ராதிருமணம்

No comments

Powered by Blogger.