Header Ads

Header ADS

20 ஓவர் உலகோப்பையை இந்தியா வெல்லும்: பட்லர் கணிப்பு

ஆமதாபாத், மார்ச் 11-
ஜோஸ் பட்லர்

நடைபெற உள்ள 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் கோப்பை வெல்ல இந்திய அணிக்கு அதிக வாய்ப்புள்ளது என இங்கிலாந்து வீரர்  ஜோஸ் பட்லர் கூறினார்.

சுவாரசியமான விஷயங்கள்

 இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. டெஸ்ட் தொடரை 3-1 என இந்தியா வென்ற நிலையில் இருஅணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டுவெண்டி20 நாளை குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் தொடங்க உள்ளது.

இந்நிலையில் வரும் செப்டம்பர் மாதம் இந்தியாவில் நடக்கும் டுவெண்டி20 உலககோப்பை போட்டி குறித்து சில சுவாரசியமான விஷயங்களை இங்கிலாந்து அணியின் அதிரடி ஆட்டக்காரரான விக்கெட் கீப்பர் ஜோஸ் பட்லர் பகிர்ந்துள்ளார். அவர் கூறியதாவது:

இந்தியா வெல்லும்

‛‛உலககோப்பை போட்டிகளை சொந்த நாட்டில் நடத்துவது ஒவ்வொரு அணிக்கும் சிறப்பான விஷயம். ஏனென்றால் சொந்த மண்ணில் விளையாடும் அணிகளே அதிகமுறை கோப்பை வென்றுள்ளன. 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் இந்தியா, நியூசிலாந்து, வெஸ்ட்இண்டீஸ், ஆஸ்திரேலிய அணிகள் நன்றாக விளையாடுகின்றன.

இந்தாண்டு இந்தியாவில் 20 ஓவர் உலககோப்பை கிரிக்கெட் போட்டி நடைபெற உள்ளது. இது இந்திய அணிக்கு சாதகமான அம்சம். சொந்த மண்ணில் விளையாடுவது இந்தியாவுக்கு கூடுதல் பலம். உலககோப்பையை வெல்ல இந்தியாவுக்கு அதிக வாய்ப்புள்ளது.

இந்தியாவுக்கு எதிராக நாங்கள் 5 டுவெண்டி20 போட்டிகளில் விளையாட உள்ளோம். இந்த அனுபவம் 20 ஓவர் உலககோப்பை போட்டிக்கு நிச்சயம் எங்களுக்கு கைக்கொடுக்கும்’’ என்றார்.


#joshbuttler #wicketkeeperbatsman #indengt20 #indiawint20worldcup #2021t20worldcup #cricket #india #bcci #icc

No comments

Powered by Blogger.