Header Ads

Header ADS

கவுதம் மேனனுடன் தடைப்பட்ட விஜய் படம்; ‛யோஹன்’ கதை என்ன தெரியுமா


சென்னை, மார்ச் 30-


இளைய தளபதி விஜயை வைத்து இயக்குனர் கவுதம் மேனன் எடுப்பதாக இருந்த ‛யோஹன் அத்தியாயம் ஒன்று’ தடைப்பட்டது. இந்நிலையில் படத்தின் கதை என்ன  என்பதை கவுதம் மேனன் வெளிப்படுத்தி உள்ளார்.

கவுதம் மேனன்

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவர் கவுதம் மேனன், காதல் படங்கள் இயக்குவதில் கைதேர்ந்தவர். இவர் இயக்கிய மின்னலே, காக்க காக்க, வேட்டையாடு விளையாடு, வாரணம் ஆயிரம், விண்ணை தாண்டி வருவாயா, நீதானே என் பொன் வசந்தம், என்னை அறிந்தால் போன்ற படங்கள் இன்றும் ரசிகர்கள் மத்தியில் பேசும் பொருளாக உள்ளது.

இவர் ஆக் ஷன் படங்கள் எடுத்தாலும் அதிரடிக்கு பஞ்சமிருக்காது. பரபரப்பான ஆக் ஷன் படங்களிலும் கூட காதல் காட்சிகள், வசனங்கள் இருபாலரின் இதயங்களை ஈர்ப்பதாகவே இருக்கும்.

யோஹன் அத்தியாயம் ஒன்று

இந்நிலையில் தான் இளைய தளபதி விஜயை வைத்து ‛யோஹன் அத்தியாயம் ஒன்று’ என்ற பெயரில் படம் எடுக்க கவுதம் மேனன் முடிவு செய்தார். க்ரைம் த்ரில்லர் படமான இதுபற்றி 2010ல் விஜயிடம் கூறினார்.


கதை பிடித்ததாக விஜய் கூறியதை தொடர்ந்து படத்துக்கான போஸ்டரும் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. இறுதியில் சில காரணங்களால் படம் தடைப்பட்டது. இது கவுதம் மேனன், விஜய் ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

கதை என்ன

இந்நிலையில் ‛யோஹன் அத்யாயம் ஒன்று’ படத்தின் கதை குறித்து கவுதம் மேனன் சமீபத்திய பேட்டியில் கூறியுள்ளார். அவர் கூறியதாவது:

விஜய் நடிப்பதாக இருந்த ‘யோஹன் அத்தியாயம் ஒன்று’  ஒரு சர்வதேச திரைப்படம். உளவு த்ரில்லர் கதையம்சம் கொண்டது.  படம் முழுவதையும் வெளிநாட்டில் படம்பிடிக்க முடிவு செய்து இருந்தேன்.

21 வயது நிரம்பிய விஜய் கல்லுாரி மாணவர். அப்போது அவரது தோழி விமான விபத்தில் பலியாகிறார். இதற்கு காரணமானவர்களை விஜய் தேடுவார். முக்கிய தகவல்களை சேகரிப்பார். விஜயின் முயற்சியை பாராட்டும் உளவுத்துறை அவரை பணியில் சேர்த்து கொள்வார்கள். இதை வைத்து தான் கதைக்களம் அமைக்கப்பட்டுள்ளது’’ என்றார். 

இணையத்தில் வைரல்

கவுதம் மேனனின் இந்த பேட்டி தொடர்பான வீடியோக்கள் இணையத்தில் தற்போது வைரலாகி உள்ளன. இதை பார்க்கும் ரசிகர்கள் விரைவில் கவுதம் மேனன், விஜய் இணைய வேண்டும். இந்த படத்தின் படப்பிடிப்பு மீண்டும் தொடங்க வேண்டும் என விருப்பம் தெரிவித்து வருகின்றனர்.


No comments

Powered by Blogger.