ரிஷாப், சூர்யா, கிஷானுக்கு ‛அட்வைஸ்’: ‛ஹிட்மேன்’ ரோஹித் சொன்னதென்ன
ஆமதாபாத், மார்ச் 12-
‛ஹிட்மேன்’ ரோஹித் ஷர்மா |
இங்கிலாந்து அணிக்கு எதிரான 20 ஓவர் கிரிக்கெட் போட்டி இன்று தொடங்கும் நிலையில் இளம் வீரர்களான ரிஷாப் பண்ட், சூர்யகுமார் யாதவ், இஷான் கிஷானுக்கு இந்திய துணைகேப்டனான ‛ஹிட்மேன்’ ரோஹித் ‛அட்வைஸ்’ கொடுத்துள்ளார்.
20 ஓவர் கிரிக்கெட்
இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. டெஸ்ட் தொடரை இந்திய அணி 3-1 என்ற கணக்கில் வென்றது. இருஅணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட 20 ஒவர் தொடர் நடக்கிறது. முதல் போட்டி குஜராத் மாநிலம் ஆமதாபாத் மைதானத்தில் இன்று இரவு 7.00 மணிக்கு தொடங்குகிறது.
ஐ.பி.எல்.லில் கலக்கிய மும்பை இந்தியன்ஸ் சூர்யகுமார் யாதவ், இஷான்கிஷான் ஆகியோர் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர். ‛பிளேயிங் 11’ அணியில் இவர்களுக்கு வாய்ப்பு கிடைக்குமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். இந்நிலையில் இளம்வீரர்களுக்கு ‛ஹிட்மேன்’ ரோஹித் ஷர்மா ‛அட்வைஸ்’ வழங்கியுள்ளார். அவர் கூறியதாவது:
ஒத்திகை சரியாக இருக்காது
இங்கிலாந்துக்கு எதிரான 20ஓவர் தொடர் 5 போட்டிகள் கொண்டது. இது நீண்டகால தொடராக இருப்பதால் ஒவ்வொரு போட்டியிலும் தனிக்கவனம் செலுத்த வேண்டும். வீரர்கள் தனிப்பட்ட முறையிலும், அணியாகவும் சிறப்பாக செயல்பட்டு ஒவ்வொரு போட்டியையும் வெல்ல விரும்புகிறோம். இதுவே எதிர்கால போட்டிகளை சிறப்பானதாக மாற்றும்.
எதிர்வரும் 20 ஓவர் உலககோப்பை போட்டியை மனதில் வைத்து செயல்பட விரும்பவில்லை. இங்கிலாந்துக்கு எதிரான தொடரை 20 ஓவர் உலககோப்பை போட்டிக்கான ஒத்திகையாக நினைக்கவில்லை. இந்தியாவுக்கான டீசர்ட் அணிந்து களம்இறங்கியபின் ஒத்திகை பார்ப்பது என்பது சரியாக இருக்காது.
பதற்றம் வேண்டாம்
அணியில் இடம்பிடிக்கும் வீரர்கள் யார் என்பது பற்றி நான் கூறமுடியாது. அதற்கு நீங்கள் போட்டி தொடங்கும் வரை காத்திருக்க வேண்டும்.
இஷான்கிஷான், சூர்யகுமார் யாதவ் |
பினிஷராக பண்ட்
ரிஷாப் பண்ட்டை அவரது போக்கில் விட்டுவிட வேண்டும். அவர் அவராகவே ஆட வேண்டும். இதை தான் எதிர்பார்க்கிறோம். இவ்வாறு அவர் விளையாடினால் நல்ல பினிஷராக மாறுவதோடு, இந்திய அணிக்கு தேவையான ஆட்டத்தை உறுதியாக வெளிப்படுத்துவார்.
ரோஹித்ஷர்மாவுடன், ரிஷாப் பண்ட் |
ஹர்திக் பாண்ட்யா நீண்ட நாட்களுக்கு பிறகு அணிக்கு திரும்பியுள்ளார். ஓய்வு காலத்தில் பேட்டிங், பவுலிங் பயிற்சியை நன்றாக மேற்கொண்டுள்ளார். அவர் எவ்வாறு பயிற்சி எடுத்தார் என்பதை இந்த ஆட்டத்தின் மூலம் வெளிப்படுத்துவார்.
இவ்வாறு ரோஹித் ஷர்மா கூறினார்.
#Rohitadvice #rohitsharma #suryakumaryadav #ishankishan #rishabpant #hardikpandiya #indi_engt20 #indvseng #ahamadabad #modistadium #viratkohli #klrahul #rohitpressconference #englandtourofindia
No comments