தனுசுக்கு தேசியவிருது கிடைத்தது எப்படி; ரகசியம் உடைத்த கங்கை அமரன்
புதுடெல்லி, மார்ச் 23-
தனுசுக்கு சிறந்த நடிகருக்கான தேசிய விருது கிடைத்தது எப்படி என்ற ரகசியத்தை இயக்குனர் கங்கை அமரன் கூறியுள்ளார்.
நடிகர் தனுஷ் |
தனுசுக்கு தேசியவிருது
இந்திய சினிமாவுக்கான 67ம் ஆண்டு தேசிய விருது விவரம் அறிவிக்கப்பட்டது. தமிழ் திரைத்துறைக்கும் 8 தேசிய விருதுகள் கிடைத்துள்ளன வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்த ‛அசுரன்’ படம், தமிழ் மொழியின் சிறந்த திரைப்படத்துக்கான தேசிய விருதை வென்றுள்ளது.
‛அசுரன்’ படத்தில் நடித்த தனுசுக்கு சிறந்த நடிகருக்கான தேசிய விருதும், சிறந்த துணை நடிகருக்கான தேசிய விருது ‛சூப்பர் டீலக்ஸ்’ படத்துக்காக நடிகர் விஜய் சேதுபதிக்கு, சிறந்த இசையமைப்பாளருக்கான விருது தல அஜித் நடித்த ‛விஸ்வாசம்’ படத்தின் இசையமைப்பாளர் இமானுக்கு கிடைத்துள்ளது.
‛ஸ்பெஷல் ஜூரியில்’ பார்த்திபனின் ‛ஒத்த செருப்பு சைஸ்–7’ படத்துக்கு தேசியவிருதும், சிறந்த ஆடியோக்ராபிக்கான விருது அப்படத்தின் சவுண்ட் என்ஜினீயர் ரசுல் பூக்குட்டிக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சிறந்த குழந்தை நட்சத்திரத்துக்கான விருந்து ‛கேடி என்கிற கருப்பதுரை’ படத்தில் நடித்த நாகா விஷாலுக்கு வழங்கப்பட உள்ளது.
சண்டையிடவில்லை
இந்நிலையில் தேசிய விருது தேர்வுக்குழுவில் இடம்பெற்ற இயக்குனரும், இசையமைப்பாளரும், பாடலாசிரியருமான கங்கை அமரன் தமிழ் திரைப்படத்துறைக்கு கிடைத்த தேசியவிருதுகள் குறித்து சில தகவல்களை கூறியுள்ளார். அவர் கூறியதாவது:
கங்கை அமரன் |
ஒருமனதாக தேர்வு
சிறந்த நடிகருக்கான பிரிவில் ஒருமனதாகவே ‛அசுரன்’ படத்தில் நடித்த நடிகர் தனுஷ் தேசிய விருதுக்கு தேர்வு செய்யப்பட்டார். ‛ஒத்தசெருப்பு’ படத்திற்கு கதை எழுதி, பார்த்திபன் நடித்திருந்தார். பார்த்திபனும் தேசியவிருது வென்றுள்ளார் என கூறினர். எந்த பிரிவில் என்று கேட்டேன். அதற்கு இந்த படத்தை எந்த பிரிவில் சேர்க்கவேண்டும் என்பது எங்களுக்கு தெரியவில்லை. அவரது அனைத்து பணிகளும் படத்தில் அருமையாக உள்ளது என்றனர். இது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
#dhanushnationalaward #gankaimaran #nationalawards #vijyasethupathi #othaseruppu #parthipan
No comments