Header Ads

Header ADS

இந்தியா-இங்கிலாந்து டி20 போட்டி; முதல் வெற்றி யாருக்கு

 ஆமதாபாத், மார்ச் 12-

விராட் கோஹ்லி, இயான் மோர்கன்
இந்தியா-இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான முதலாவது டுவெண்டி20 போட்டி ஆமதாபாத்தில் இன்று இரவு 7.00 மணிக்கு தொடங்குகிறது. முதல் வெற்றியை பெற இருஅணிகளும் மல்லுக்கட்டும் என்பதால் போட்டியில் சுவாரசியத்திற்கு குறைவு இருக்காது.

முதல் டுவெண்டி20

இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. டெஸ்ட் தொடரை 3-1 என இந்தியா வென்ற நிலையில் இருஅணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டுவெண்டி20 போட்டிகள் நடக்கிறது.

முதல் போட்டி குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் உள்ள மிகப்பெரிய ‛நரேந்திர மோடி’ மைதானத்தில் இரவு 7.00 மணிக்கு தொடங்குகிறது.

பலமான இந்திய அணி

இந்திய அணியில் தொடக்க ஆட்டக்காரராக ரோஹித் ஷர்மாவுடன் களம் இறங்க லோகேஷ் ராகும், ஷிகர்தவான் ஆகியோர் இடையே போட்டி நிலவுகிறது. இருப்பினும் ராகுல் களம்காண அதிக வாய்ப்புள்ளது.

ஐ.பி.எல். போட்டியில் கலக்கிய மும்பை இந்தியன்ஸ் சூர்யகுமார் யாதவ், இஷான்கிஷான் ஆகியோர் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு வாய்ப்பு கிடைக்குமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

இவர்கள் தவிர பின்வரிசையில் அதிரடி ஆட்டக்காரர்களான ஹர்திக் பாண்ட்யா, ரிஷாப் பண்ட் மற்றும் ஸ்ரேயாஸ் அய்யர் ஆகியோர் அணியில் அங்கம் வகிக்கின்றனர். இவர்களுடன் விராட் கோஹ்லி இருப்பதால் இந்தியாவின் பேட்டிங் வரிசை பலமாகவே உள்ளது.

தேர்வு கடினம்

வேகப்பந்து வீச்சை பொறுத்தவரையில் பும்ரா, தமிழக வீரர் நடராஜன் இல்லை. இதனால் நீண்டநாட்களுக்கு பின் அணிக்கு திரும்பி புவனேஸ்வர் குமார் தலைமையில் வேகப்பந்து கூட்டணி செயல்படும். ஷர்துல் தாகூர், தீபக்சாகார், நவ்தீப் சைனி ஆகியோர் அணியில் இடம்பிடிக்க ஆர்வமாக உள்ளனர்.

புவனேஸ்வர் குமார்
சுழல்பந்துவீச்சுக்கு தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தர், அக்சர்படேல், ராகுல் சாகர் உள்ளனர். அணியில் திறமையான இளம் வீரர்கள் அதிகம் உள்ளதால் விளையாடும் 11 பேரை தேர்வு செய்வது என்பது கேப்டன் விராட் கோஹ்லிக்கு கடினமாகவே இருக்கும்.

மோர்கன் தலைமை

இங்கிலாந்து அணி இயான் மோர்கன் தலைமையில் களமாட உள்ளது. அந்த அணியும் பலமாகவே உள்ளது. அதிரடி காட்ட மோர்கனுக்கு பக்கபலமாக பென் ஸ்டோக்ஸ், ஜோஸ் பட்லர், டேவிட் மாலன், ஜேசன்ராய் ஆகியோர் உள்ளனர்.

வேகப்பந்துவீச்சை பொறுத்தமட்டில் ஜோப்ரா ஆர்ச்சர், கிறிஸ் ஜோர்டான், மார்க்உட் உள்ளனர். மொயின் அலி, அடில் ரஷித் ஆகியோர் சுழலில் சூறாவளியாக மாறலாம்.

மைதானம் எப்படி

ஆமதாபாத் மைதானம் ரன்மழையை பொழியும் வகையில் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது. இதனால் இருஅணி பேட்ஸ்மேன்களும் வாணவேடிக்கை காட்டலாம்.

#ind_eng #ahmadabad #firstt20 #modistadium #rohit #rishabpant #kohli #suryakumaryadav #morgan #jofraarchar #இந்தியா-இங்கிலாந்துபோட்டி

No comments

Powered by Blogger.