Header Ads

Header ADS

கோலியே உலகின் தலைசிறந்த கேப்டன்; புகழ்ந்து தள்ளியது யார்?

புனே, மார்ச் 23- 
பிரசித் கிருஷ்ணா

இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணியில் புதுமுக வேகப்பந்து வீச்சாளர் பிரசித் கிருஷ்ணா இடம் பிடித்துள்ளார்.  இவர், ‛‛விராட் கோலியே உலகின் தலை சிறந்த கேப்டன்’’ என புகழ்ந்து தள்ளியுள்ளார்.

அதன் விபரம் வருமாறு:

புதுமுக வீரர்கள்

இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. டெஸ்ட் மற்றும் டுவெண்டி20 தொடரை இந்தியாவிடம் இழந்த இங்கிலாந்து 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் மோதுகிறது. இந்தியா-இங்கிலாந்து இடையேயான முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி இன்று புனேவில் துவங்குகிறது.

இந்திய அணியில் புதுமுகமாக கர்நாடகத்தை சேர்ந்த வேகப்பந்து வீச்சாளரும், ஐ.பி.எல்.,லில் கொல்கத்தா அணிக்காக விளையாடும் பிரசித் கிருஷ்ணா, மும்பை இந்தியன்ஸ் அணி ஆல்ரவுண்டர் குருணால் பாண்ட்யா, பேட்ஸ்மேன் சூர்யகுமார் யாதவ் இடம் பெற்றுள்ளனர். ஆடும் லெவனில் இவர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்படுமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

எதிர்பார்ப்பு

இந்நிலையில்  பிரசித் கிருஷ்ணா அளித்த பேட்டியில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி குறித்து கூறியுள்ளார். அவர் கூறியதாவது:
பிரசித் கிருஷ்ணா

‛‛இந்திய அணியுடன் இணைவதை எதிர்பார்த்து காத்திருக்கிறேன். எனக்கு இந்த வாய்ப்பு கிடைத்ததற்கான பெருமை அனைத்தும் உள்ளூர் கிரிக்கெட் போட்டியையே சேரும். சமீபத்தில் நடந்து முடிந்த விஜய் ஹசாரோ போட்டியில் சிறப்பாக செயல்பட்டேன். 7 போட்டிகளில் 14 விக்கெட்டுகள் கைப்பற்றினேன்.

இதன்மூலம் இந்திய அணிக்குள் நுழைவேன் என நினைத்தேன். அதேபோல் வாய்ப்பு கிடைத்துள்ளது. ஒவ்வொருவரும் சிறப்பாக செயல்பட்டால் அதற்கான பலன் நிச்சயம் கிடைக்கும். என்மீது நம்பிக்கை வைத்து இந்தியாவுக்காக தேர்வு செய்த தேர்வாளர்களுக்கு நன்றி.

ஆவலாக இருக்கிறேன்

விராட் கோலி உலகில் சிறந்த பேட்ஸ்மேன் மற்றும் கேப்டனாக உள்ளார். அவரது தலைமையில் விளையாடுவதில் ஆவலாக இருக்கிறேன். தற்போது இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் போட்டியில் தான் கவனம் செலுத்த உள்ளேன். மேற்கொண்டு எதையும் நான் சிந்திக்கவில்லை’’ என்றார்.

#indvseng #indvsengodi #prasidhkrishna #viratkohli #pune #suryakumaryadav #kurnalpandya #kkr #indvsengfirstodi #indi_engfirstodi #pacerprasidhkrishna

No comments

Powered by Blogger.