Header Ads

Header ADS

ஐ.பி.எல். போட்டியால் இவர்களுக்கு தான் ஆதாயம்; மனம் திறந்தார் பட்லர்

ஆமதாபாத், மார்ச் 11- 


ஜோஸ் பட்லர்

ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிகள் மூலம் யார் ஆதாயம் அடைகிறார்கள் என இங்கிலாந்து அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ஜோஸ் பட்லர் மனம்திறந்து பேசினார்.

ராஜஸ்தான் அணியில் பட்லர்

இங்கிலாந்து அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ஜோஸ் பட்லர். இவர் ஐ.பி.எல். கிரிக்கெட்டில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி அடுத்த மாதம் (ஏப்ரல்) 9ம் தேதி தொடங்கி மே 30ல் முடிவடைகிறது. இங்கிலாந்து, நியூசிலாந்து அணிகள் மோதும் டெஸ்ட் தொடர் ஜூன் 2ல் தொடங்குகிறது.

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் பட்லர்

இந்நிலையில் ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிகளில் கலந்து கொள்வது மற்றும் தொடர்ச்சியாக கிரிக்கெட் விளையாடுவதை தவிர்க்க இங்கிலாந்தின் முன்னணி வீரர்கள் நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை புறக்கணிக்க உள்ளதாக செய்திகள் பரவின. இதற்கு ஜோஸ் பட்லர் விளக்கமளித்துள்ளார். அவர் கூறியதாவது:

விரும்பாத கிரிக்கெட் வாரியம்

ஐ.பி.எல். ஒப்பந்தத்தில் அதிகளவில் பணம் கிடைக்கிறது. இதை மறுக்க முடியாது. வீரர்களுக்கு பணம் வரும் வழிகளை தடுக்க இங்கிலாந்து கிரிக்கெட் வாரியமும் விரும்பவில்லை.

ஐ.பி.எல். போட்டியை விட்டுவிட்டு நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் ஆடவேண்டும் என என்னிடம் இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் கூறவில்லை. மற்றவீரர்கள் குறித்து நான் கருத்து எதுவும் கூறமுடியாது. நியூசிலாந்து டெஸ்ட் தொடருக்கு முன்பாகவே, ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி நடைபெறும் மாதம் தோராயமாக தெரியவந்தது.

யாருக்கு ஆதாயம்

இந்த ஆண்டு இந்தியாவில் தான் 20 ஓவர் உலககோப்பை போட்டி நடக்கிறது. இதனால் இங்கு ஐ.பி.எல். போட்டிகளில் விளையாடுவது ஒவ்வொரு வீரர்களுக்கும் சாதகமான ஒன்று. பிற அணி வீரர்கள் இந்தியாவின் சீதோஷ்ணநிலையை புரிந்து கொண்டு உலககோப்பை போட்டிகளில் சிறப்பாக விளையாடலாம்.

ஆர்ச்சர், ஸ்டோக்ஸ், பட்லர்

இங்கிலாந்து அணி சார்பில் நான், பென் ஸ்டோக்ஸ், ஜோப்ரா ஆர்ச்சர் (3 பேரும் ராஜஸ்தான் ராயல்ஸ்) மோயின்அலி, சாம் குரான் (இருவரும் சென்னை அணி) டாம் குரான் (டெல்லி கேப்பிட்டல்ஸ்), டேவிட் மாலன் (பஞ்சாப்) உட்பட 12 பேர் ஐ.பி.எல். ஆடுகிறோம். இந்த அனுபவம் நிச்சயம் 20 ஓவர் உலககோப்பை போட்டிக்கு இங்கிலாந்து அணிக்கு கைக்கொடுக்கும். ஐ.பி.எல். அனுபவம் வீர்களுக்கு தனிப்பட்ட முறையிலும், அந்தந்த நாட்டு அணிகளுக்கும் ஆதாயமாக தான் இருக்கும்’’ என்றார்.

#josbuttler #wicketkeeperbatsman #indengt20 #indiawint20worldcup #2021t20worldcup #cricket #india #bcci #icc #ipl #april9 #ipl #rajasthanroyals #csk #RR #delhicapitals #chennaisuperkings #kingspunjab #ahmadabad #modistadium

No comments

Powered by Blogger.