‛இந்தியன் 2’ படப்பிடிப்பு தாமதம் ஏன்: கதாநாயகி காஜல் அகர்வால் விளக்கம்
சென்னை, மார்ச் 17-
‛இந்தியன் 2’
பிரமாண்ட இயக்குனர் சங்கர் இயக்கத்தில் உலக நாயகன் கமல் நடிக்கும் படம் ‛இந்தியன் 2. கதாநாயகியாக காஜல் அகர்வால் நடிக்கிறார். கடந்த ஆண்டு பிப்ரவரியில் படப்பிடிப்பு தளத்தில் கிரேன் விபத்து நடந்தது.இதில் 2 பேர் பலியாகினர். 10க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
இதனால் படப்பிடிப்பு தடைப்பட்டது. சட்டச்சிக்கல்கள் எழுந்தது மற்றும் கொரோனா பரவல் காரணங்களால் மீண்டும் படப்பிடிப்பு தொடங்கவில்லை. கமல் தற்போது சட்டசபை தேர்தல் பிரசாரத்தில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறார். இதனால் படப்பிடிப்பு தொடங்க இன்னும் தாமதம் ஏற்படும் என்று கூறப்படுகிறது.
காஜல் விளக்கம்
இந்நிலையி்ல ‛இந்தியன் 2’ படப்பிடிப்பு தாமதத்துக்கான காரணம் குறித்து அப்படத்தின் கதாநாயகியான காஜல் அகர்வால் கூறியுள்ளார்.
அவர் கூறுகையில், ‛‛படத்தில் பணி செய்யும் பெரும்பாலானோர் அமெரிக்காவை சேர்ந்தவர்கள். கொரோனா கட்டுப்பாடுகளால் அவர்களால் வரமுடியவில்லை. இதனால் தான் படப்பிடிப்பு தாமதம்’’ என்றார்.
#indian2 #kamal #covid19 #directorshankar #graneaccident #kajaagarwal #kajalexplanation #indian2movie
No comments