Header Ads

Header ADS

தேசிய விருது இயக்குனர் ஜனநாதன் மரணம்: திரையுலகத்தினர் அதிர்ச்சி

சென்னை, மார்ச் 15-

ஜனநாதன்
தேசிய விருது பெற்ற ‛இயற்கை’ திரைப்படத்தின் இயக்குனர் ஜனநாதன் மூளைச்சாவு அடைந்த நிலையில் மாரடைப்பால் மரணம் அடைந்தார். திரையுலகத்தினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்

தேசியவிருது இயக்குனர்

தமிழில் இயற்கை, ஈ, பேராண்மை, புறம்போக்கு என்கிற பொதுவுடைமை, படங்களை இயக்கியவர் எஸ்.பி.ஜனநாதன். கம்யூனிச சித்தாந்தங்களில் ஈர்ப்பு கொண்டவர். இயக்குனராக அறிமுகமான ‛இயற்கை’ க்கு சிறந்த படத்துக்கான தேசிய விருது கிடைத்தது.

தமிழ் சினிமாவில் சமூக பிரச்னை மற்றும் கம்யூனிச கொள்கைகள் அடிப்படையில் படமெடுத்து பொதுமக்களுக்கு வழங்கினார். கம்யூனிசம் மீதான இவரது நாட்டம் பேராண்மை, புறம்போக்கு என்கிற பொதுவுடைமை படங்களில் வெளிப்பட்டது.

தற்போது ‛லாபம்’ என்ற படத்தை விஜய்சேதுபதி, ஸ்ருதிஹாசனை வைத்து இயக்கி வந்தார். படப்பிடிப்பு இறுதிகட்டத்தை எட்டிய நிலையில் எடிட்டிங் பணியை கவனித்து வந்தார்.

மாரடைப்பால் மரணம்

கடந்த 11ந் தேதி வீட்டுக்கு சென்று சாப்பிட்டு வருவதாக சென்றார்.நீண்டநேரம் ஆகியும் மீண்டும் திரும்பவில்லை. உதவி இயக்குனர்கள் சென்று பார்த்தனர். மயங்கிய நிலையில் கிடந்தார்.

அவர்கள் மீட்டு மருத்துவமைனையில் அனுமதித்தனர். சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் அவர் மூளைச்சாவு அடைந்தார். அதன்பின் நேற்று காலை மாரடைப்பு ஏற்பட்டு அவர் மரணமடைந்தார்.

புகழஞ்சலி

ஜனநாதன் மறைவால் தமிழ் திரையுலகத்தினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இவர் இயக்கத்தில் நடித்த நடிகர் ஷாம், ஆர்யா, விஜய்சேதுபதி உள்பட திரையுலகினர் பலரும் புகழஞ்சலி செலுத்தி வருகிறார்கள். 

#jananathan #director #nationalawardwinner #iyarkai #lapam #sham #vijaysethupathi #peranmai #jananathanpassedaway #directorjananathan

No comments

Powered by Blogger.