ஆர்.சி.பி.யில் இணைந்த இளம் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன்; வித்யாச ஷாட்களில் வல்லவர்
பெங்களூரு, மார்ச் 11-
பின் ஆலன் |
ஜோஸ் பிலிப் விலகல்
2021ம் ஆண்டுக்கான ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டி ஏப்ரல் 9ம் தேதி தொடங்கி மே 30ல் முடிகிறது. வீரர்களுக்கான மினி ஏலம் சமீபத்தில் நடந்தது. போட்டி தொடங்க இன்னும் ஒரு மாதம் மட்டுமே உள்ளதால் சென்னை அணி பயிற்சியை தொடங்கிவிட்டது. மற்ற அணிகளும் பயிற்சியை விரைவில் தொடங்க உள்ளன.இந்நிலையில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியில் இடம் பிடித்து இருந்த ஆஸ்திரேலியா விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ஜோஸ் பிலிப் தனிப்பட்ட காரணங்களால் இந்தாண்டு ஐ.பி.எல் போட்டியில் இருந்து விலகி உள்ளார்.
மாற்றாக ஆலன்
இவருக்கு மாற்றாக நியூசிலாந்தை சேர்ந்த 21 வயது நிரம்பிய இளம் தொடக்க ஆட்டக்காரரான விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் பின் ஆலன் ரூ.20 லட்சத்திற்கு சேர்க்கப்பட்டு உள்ளார்.
இவரை சமீபத்திய ஏலத்தில் எந்த அணியும் எடுக்க முன்வராத நிலையில் தற்போது பின் ஆலனை பெங்களூரு அணி அவரது அடிப்படை விலையிலேயே மாற்று வீரராக அணியில் இணைத்து உள்ளது.
யார் இவர்
இவர் நியூசிலாந்து தேசிய அணியில் இன்னும் இடம்பிடிக்கவில்லை. இருப்பினும் முதல் தர கிரிக்கெட்டில் 12 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 3 அரைசதத்துடன் 343 ரன்களும் லிஸ்ட் ஏ பிரிவில் 20 போட்டிகளில் 501 ரன்கள் குவித்துள்ளார். இதில் அதிகபட்சம் 128 ஆகும். 13 டுவெண்டி20 போட்டிகளில் 13 போட்டிகளில் 537 ரன்களும் அதிகபட்சமாக அவுட் ஆகாமல் 92 ரன்கள் எடுத்துள்ளார்.
பின் ஆலன் |
இந்த தொடரில் மொத்தம் 512 ரன்கள் குவித்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். இதில் 25 சிக்ஸர்கள் அடங்கும். இவரது ஸ்ட்ரைக்ரேட் 194 ஆக இருந்தது.
#finnallen #nzplayer #wicketkepperbatsman #opener #replacement #joshphilp #aussiewicketkepper #rcb #Ipl2021 #bengaluru #royalchallegersbengaluru #viratkohli #ஐ.பி.எல்.2021 #பின்ஆலன் #ஜோஸ்பிலிப் #பெங்களூருஅணி #ஆர்.சி.பி.
No comments