Header Ads

Header ADS

ஆஸ்திரேலிய வீரர்களை கைவிட்ட அந்நாட்டு பிரதமர்; கிறிஸ் லின் கோரிக்கையை ஏற்க மறுப்பு

சிட்னி, ஏப்.28-

ஐ.பி.எல். முடிந்து தாயகம் திரும்ப வசதியாக தனிவிமானம் வேண்டும் என மும்பை வீரர் கிறிஸ்லின் வைத்த கோரிக்கையை ஏற்க ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசன் முற்றிலுமாக மறுத்துள்ளார். மேலும் அவர்கள் ஆஸ்திரேலிய நாட்டுக்கான சுற்றுப்பயணத்திலா விளையாடுகிறார்கள் என ஆக்ரோஷமாக கூறினார்.

விமானங்கள் ரத்து

இந்தியாவில் கொரோனா பரவி வருகிறது. ஐ.பி.எல். போட்டிகள் முறையான பாதுகாப்பு நடவடிக்கையுடன் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. ஆஸ்திரேலியா, மேற்கு இந்திய தீவுகள், இங்கிலாந்து, நியூசிலாந்து உள்பட பிற அணி வீரர்கள் கொரோனா பாதுகாப்பு வளையத்தில் இருந்து விளையாடி வருகிறார்கள்.

மே மாதம் 30ல் ஐ.பி.எல். போட்டி முழுவதுமாக முடிகிறது. கொரோனா பரவல் காரணமாக முதற்கட்டமாக மே மாதம் 15ந் தேதி வரை இந்தியா-ஆஸ்திரேலியா இடையேயான விமான போக்குவரத்து ரத்து செய்து ஆஸ்திரேலிய அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த கட்டுப்பாடு மேலும் நீட்டிக்கப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

நாடு திரும்புவதில் சிக்கல்

இந்நிலையில் கொரோனா அச்சம் மற்றும் ஐ.பி.எல். போட்டி முடிந்து தாயகம் திரும்புவதில் ஏற்படும் சிக்கல் ஆகியவற்றால் முன்னெச்சரிக்கையாக ஆஸ்திரேலியாவின் ஆன்ட்ரூ டை(ராஜஸ்தான்) ஆடம் ஜம்பா, ரிச்சட்சன் (இருவரும் பெங்களூரு) ஆகியோர் தொடரில் இருந்து விலகி சொந்தநாட்டுக்கு புறப்பட்டுள்ளனர்.

ஆனாலும் ஆஸ்திரேலிய வீரர்களான ஸ்டீவ் ஸ்மித், ஸ்டாய்னிஸ் (டெல்லி), டேவிட் வார்னர்(ஐதராபாத்), நாதன் கவுல்டர் நீல், கிறிஸ்லின் (மும்பை), மேக்ஸ்வெல் (பெங்களூரு) போன்ற முன்னணி வீரர்களும், முன்னாள் வீரர்களான ரிக்கிபாண்டிங் (டெல்லி), ஹசி சகோதரர்கள், சைமன் காடிச் உள்ளிட்ட சில பயிற்சியாளர்களும் தொடர்ந்து போட்டிகளில் பங்கேற்கிறார்கள்.

தனிவிமான கோரிக்கை

இந்நிலையில் ஐ.பி.எல். போட்டி முடிந்த பிறகு வீரர்கள் நாடு திரும்ப தனிவிமானம் ஏற்பாடு செய்ய வேண்டும் என கிறிஸ்லின் (மும்பை) ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்துக்குள் கோரிக்கை வைத்தார். இதுபற்றி அவர் கூறியதாவது:

‛‛ஐ.பி.எல். ஒவ்வொரு ஒப்பந்தத்தின்போதும் 10 சதவீத தொகை ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்துக்கு கிடைக்கிறது. இந்த தொகையை நடப்பு ஆண்டில் ஐ.பி.எல். முடித்து வீரர்கள் நாடு திரும்ப ஏதுவாக தனிவிமானத்துக்கு செலவிட வேண்டும். இந்தியாவில் நாங்கள் கொரோனா பரவல் தடுப்புக்கான பாதுகாப்பு வளையத்தில் இருந்து விளையாடி வருகிறோம். அடுத்த வாரம் கொரோனா தடுப்பூசியும் செலுத்தி கொள்ள இருக்கிறோம். அதனால் ஆஸ்திரேலிய அரசு தனிவிமானத்தை ஏற்படுத்தி கொடுக்கும் என நம்புகிறோம்’’ என்றார்.

ஆஸ்திரேலிய பிரதமர் மறுப்பு

ஸ்காட் மோரிசன்
கிறிஸ் லின்னின் இந்த கோரிக்கையை ஆஸ்திரேலிய அரசு ஏற்கவில்லை. இதுதொடர்பாக அந்த நாட்டின் பிரதமர் ஸ்காட் மோரிசன் கூறுகையில், ‛‛ஆஸ்திரேலிய வீரர்கள் ஐ.பி.எல்.லில் விளையாட சொந்த செலவில் சென்றனர். அவர்கள் ஆஸ்திரேலிய தொடருக்காக  செல்லவில்லை. தனிப்பட்ட முறையில் இந்தியா சென்றதால் அதேபோல் தாயகம் திரும்ப அவர்களே ஏற்பாடு செய்து கொள்ள வேண்டும். இதில் நாங்கள் ஒன்றும் செய்ய முடியாது’’ என்றார்.

No comments

Powered by Blogger.