ஐ.பி.எல். ஆல்டைம் லெவன் அணிக்கு டோனி கேப்டன்; டிவில்லியர்ஸ் தேர்வு
பெங்களூரு, ஏப்.5-
டிவில்லியர்ஸ் |
ஐ.பி.எல். கிரிக்கெட்டில் ‛ஆல்டைம் லெவன்’ அணியை டிவில்லியர்ஸ் தேர்வு செய்துள்ளார். இதற்கு ‛தல’ டோனியை கேப்டனாக அவர் நியமித்துள்ளார்.
டிவில்லியர்ஸ் வருகை
2021ம் ஆண்டுக்கான ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி வரும் 9–ந் தேதி தொடங்கி மே மாதம் 30–ந் தேதி முடிவடைகிறது. சென்னையில் நடக்கும் முதல் போட்டியில் ரோஹித் ஷர்மா தலைமையிலான நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் அணியும், விராட் கோலி வழிநடத்தும் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியும் மோதுகின்றன.
இந்நிலையில் பெங்களூரு அணியின் அதிரடி வீரரான தென்ஆப்பிரிக்காவின் டிவில்லியர்ஸ் சென்னை வந்துள்ளார். தனிமையில் உள்ள அவர் விரைவில் பெங்களூரு அணி வீரர்களுடன் இணைந்து பயிற்சி மேற்கொள்ள உள்ளார்.
டோனி கேப்டன்
இந்நிலையில் ஐ.பி.எல்.லில் விளையாடிய மற்றும் விளையாடும் வீரர்கள் அடிப்படையில் தனது ‛ஆல்டைம் லெவன்’ அணியை டிவில்லியர்ஸ் தேர்வு செய்துள்ளார். அணியின் கேப்டனாக சென்னை அணியை வழிநடத்தும் ‛தல’ டோனியை நியமித்துள்ளார்.
டோனி |
தொடக்க ஆட்டக்காரராக இந்தியாவின் முன்னாள் வீரர் வீரேந்தர் சேவாக், மும்பையின் ரோகித் ஷர்மாவை தேர்ந்து எடுத்துள்ளார். இந்த அணியில் விராட் கோலி, ரவீந்திர ஜடேஜா, புவனேஸ்வர் குமார், பும்ராவும் இடம் பெற்றுள்ளனர்.
ஐ.பி.எல்.லில் அதிக விக்கெட் வீழ்த்திய மலிங்கா, கிரிக்கெட் கடவுள் சச்சின் தெண்டுல்கர் ஆகியோர் இடம்பெறவில்லை. மேலும் ஐ.பி.எல்.லில் அதிக ரன்கள் குவித்துள்ள சென்னையின் ‛சின்ன தல’ ரெய்னாவுக்கும் அணியில் அவர் இடம் வழங்கவில்லை.
அணி விவரம்
ஐ.பி.எல்.லில் டிவில்லியர்ஸ் தேர்வு செய்த ‛ஆல்டைம் லெவன்’ அணி விவரம்
வீரேந்தர் சேவாக், ரோகித் ஷர்மா, விராட் கோலி, கனே வில்லியம்சன்/ ஸ்டீவ் ஸ்மித், டிவில்லியர்ஸ், பென் ஸ்டோக்ஸ், டோனி (கேப்டன், விக்கெட் கீப்பர்), ரவீந்திர ஜடேஜா, ரஷீத்கான், புவனேஸ்வர் குமார், ரபாடா, ஜஸ்பிரித் பும்ரா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
No comments