20 ஓவர் உலககோப்பையில் விளையாட டிவிலியர்ஸ் ஆசை; தென்ஆப்பிரிக்கா பயிற்சியாளர் சொன்னதென்ன
சென்னை, ஏப்.19-
இந்தியாவில் விரைவில் நடைபெற உள்ள 20 ஓவர் உலககோப்பை போட்டியில் விளையாட ஆசை என டிவிலியர்ஸ் கூறியுள்ளார். இதுதொடர்பாக தென்ஆப்பிரிக்க பயிற்சியாளர் மார்க் பவுச்சர் மற்றும் டிவிலியர்ஸ் இடையே கருத்து பரிமாற்றங்கள் நடந்துள்ளது.
அசத்தும் டிவிலியர்ஸ்
ஐ.பி.எல்.லில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் முக்கிய வீரர் ஏ.பி.டிவிலியர்ஸ். தென்ஆப்பிரிக்கா அணிக்காக 114 டெஸ்ட் (8,765 ரன்), 228 ஒருநாள் போட்டி (9500 ரன்), 78 டுவெண்டி20 (1,672 ரன்)போட்டிகளில் விளையாடியவர். 2018 ல் அனைத்து வகை போட்டிகளிலும் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.
அதன்பின் ஐ.பி.எல்.லில் தொடர்ந்து பங்கேற்று பெங்களூரு அணிக்காக விளையாடி வருகிறார். தற்போது அவருக்கு 37 வயதாகிறது. இருப்பினும் முந்தைய காலத்தில் அவர் காட்டிய அதிரடி ஆட்டத்தை களத்தில் காட்டுகிறார். பவுண்டரி, சிக்சர்கள் விளாசி அசத்துகிறார். நேற்று கொல்கத்தாவுக்கு எதிராக நடந்த போட்டியில் 34 பந்துகளில் 76 ரன்கள் குவித்து பிரமிக்க வைத்தார். நடப்பு சீசனில் பெங்களூரு அணி விளையாடிய 3 போட்டிகளிலும் வென்றுள்ளது. இதற்கு டிவிலியர்ஸ் முக்கிய காரணமாக இருந்தார்.
டிவிலியர்சின் ஆசை
இதற்கிடையே தென்ஆப்பிரிக்கா கிரிக்கெட் அணிக்காக மீண்டும் விளையாட டிவிலியர்ஸ் விரும்புவதாக தகவல்கள் வெளியானது.
இந்நிலையில் ‛‛இந்தியாவில் நடைபெற உள்ள டுவெண்டி 20 உலககோப்பை போட்டியில் தென்ஆப்பிரிக்காவுக்காக விளையாட ஆசைப்படுகிறேன்’’ என டிவிலியர்ஸ் மனம் திறந்து கூறியுள்ளார். அவர் கூறியதாவது:
காத்திருக்கிறேன்
இருப்பினும் எனது பார்ம் மற்றும் உடல்தகுதியை கவனத்தில் கொள்ள வேண்டும். இதனால் ஐ.பி.எல். முடியும் வரை காத்திருக்கிறேன். அதேநேரத்தில் தென்ஆப்பிரிக்கா அணி வீரர்களையும் பார்க்க வேண்டும். சமீபகாலமாக அவர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார்கள். இதனால் அணியில் எனக்கு இடம் கிடைக்காவிட்டாலும் பரவாயில்லை. ஒருவேளை எனக்கான இடம் அணியில் காலியாக இருந்தால் அருமையாக இருக்கும். ஐ.பி.எல். முடிவில் இதுபற்றி விவாதிக்க திட்டமிட்டுள்ளோம்’’
இவ்வாறு அவர் கூறினார்.
ஐ.பி.எல். இறுதியில் முடிவு
டிவிலியர்ஸ், மார்க் பவுச்சர் |
No comments