Header Ads

Header ADS

ஐ.பி.எல்.லில் இருந்து அஸ்வின், ஜம்பா, ரிச்சட்சன், டை விலகல்; காரணம் என்ன தெரியுமா

மும்பை, ஏப்.27-

கொரோனா பரவல் காரணமாக ஐ.பி.எல். கிரிக்கெட்டின் நடப்ப சீசனில் இருந்து அஸ்வின் (டெல்லி) , ஆடம் ஜம்பா, கனேவில்லியம்சன் (பெங்களூரு), ஆன்ட்ரூ டை(ராஜஸ்தான்) ஆகியோர் விலகியுள்ளனர்.

கொரோனா பரவல்

இந்தியாவில் கொரோனா பரவல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஒருநாள் பாதிப்பு 3.50 லட்சமாக உள்ள நிலையில் தினமும் 3 ஆயிரத்துக்கும் அதிகமானோர் இறந்து வருகிறார்கள்.

இந்த காலக்கட்டத்தில்  கடும் கட்டுப்பாடுகளுடன் ஐ.பி.எல். போட்டி ரசிகர்கள் இன்றி நடைபெற்று வருகிறது. கொரோனா பாதுகாப்பு வளையத்துக்குள் வீரர்கள் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். இருப்பினும் பெங்களூரு படிக்கல், டெல்லி அக் ஷர் படேல், மும்பை விக்கெட் கீப்பர் ஆலோசக் கிரண் மோரோ உள்ளிட்டவர்கள் பாதிக்கப்பட்டனர்.

வீரர்கள் விலகல்

ஐ.பி.எல். தொடங்கிய காலத்தை ஒப்பிடும்போது தற்போது கொரோனா பரவல் பலமடங்கு வேகத்தில் பரவி வருகிறது.

ரிச்சர்ட்சன், ஜம்பா
இந்நிலையில் கொரோனா பரவலை காரணம் காட்டி நடப்பு சீசனில் அஸ்வின் (டெல்லி கேப்பிட்டல்ஸ்), ஆன்ட்ரூ டை (ராஜஸ்தான் ராயல்ஸ்), ஆடம் ஜம்பா, கனே ரிச்சர்ட்சன் (ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு) இருந்து விலகியுள்ளனர்.

காரணம் என்ன

இதுபற்றி அஸ்வின் தனது டுவிட்டர் பக்கத்தில், ‛‛இந்த ஆண்டின் ஐ.பி.எல். தொடரில் நாளையில் இருந்து நான் விடை பெறுகிறேன். எனது குடும்பத்தினர் கொரோனா வைரசுக்கு எதிராக போராடி வருகின்றனர். இந்த இக்கட்டான காலக்கட்டத்தில் அவர்களுக்கு ஆதரவாக இருக்க விரும்புகிறேன். அனைத்தும் சரியான திசையில் சென்றால் மீண்டும் அணியில் இணைவேன்’’ என கூறியுள்ளார்.

அஸ்வின்
இதேபோல் பெங்களூரு அணியில் விளையாடி வந்த ஆஸ்திரேலிய சுழற்பந்து வீச்சாளர் ஆடம் ஜம்பா, வேகப்பந்து வீச்சாளர் கனே ரிச்சர்ட்சன் ஆகியோரும் தனிப்பட்ட காரணங்களால் நடப்பு ஐ.பி.எல். தொடரில் இருந்து விலகி தாயகம் புறப்பட்டுள்ளனர். இவர்களின் இந்த முடிவுக்கும் கொரோனா பரவல் தான் முக்கிய காரணம் என கூறப்படுகிறது.
ஆன்ட்ரூ டை
மேலும் ஆன்ட்ரூ டை ஏற்கனவே ஐ.பி.எல். தொடரில் இருந்து விலகி ஆஸ்திரேலியா புறப்பட்டு சென்றார். கொரோனா கண்காணிப்பு வளையத்துக்குள் இருந்ததால் ஏற்பட்ட மனஉளைச்சலில் அவர் தாயகம் திரும்பியது குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.