Header Ads

Header ADS

சி.எஸ்.கே., டீசர்ட்டில் மாற்றம்; மொயின் அலியின் கோரிக்கை ஏற்பு

சென்னை, ஏப்.5-
மொயின் அலி

இங்கிலாந்து ஆல்ரவுண்டரான மொயின் அலியின் கோரிக்கையை ஏற்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணி டீசர்ட்டில் இடம் பெற்றிருந்த மதுபான நிறுவனத்தின் ‛லோகோ’ நீக்கம் செய்யப்பட்டுள்ளது.

சென்னையில் மொயின் அலி

இங்கிலாந்து அணியின் ஆல்ரவுண்டர் மொயின் அலி. கடந்த ஆண்டு நடந்த ஐ.பி.எல்.லில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (ஆர்.சி.பி.) அணிக்காக ஆடினார். 3  போட்டிகளில் விளையாடிய அவர் குறிப்பிடும் வகையில் செயல்படவில்லை.

இதனால் இந்த முறை பெங்களூரு அணியில் இருந்து விடுவிக்கப்பட்டார். இதையடுத்து நடந்த வீரர்கள் ஏலத்தில் மொயின் அலியை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ரூ.7 கோடிக்கு ஏலம் எடுத்தது. நடைபெற உள்ள ஐ.பி.எல்., போட்டியில் சென்னை அணிக்காக மொயின் அலி களம் காண உள்ளார்.

லோகோ நீக்கம்

இந்நிலையில் சென்னை அணி வீரர்களுக்கான டீசர்ட்டில் எஸ்.என்.ஜே., 10000 மதுபானம்(பீர்) நிறுவனத்தின் லோகோ இடம்பெற்று இருந்தது. 

நீக்கம் செய்வதற்கு முன்பு டீசர்ட்டில் இருந்த
மதுபான நிறுவனத்தின் லோகோ(வட்டமிடப்பட்டுள்ளது)

இதுபற்றி அறிந்த மொயின்அலி அதை நீக்கும்படி அணி நிர்வாகத்துக்கு கோரிக்கை வைத்தார். மேலும் தான் மதுபானத்தை ஊக்குவிக்கும் செயலில் ஒருபோதும் ஈடுபட மாட்டேன் என கூறினார்.

இதை ஏற்றுக்கொண்ட சென்னை அணி நிர்வாகம் சென்னை அணி மொயின்அலியின் டீசர்ட்டில் இடம்பெற்றிருந்த மதுபான நிறுவனத்தின் லோகோவை நீக்கியுள்ளது.

இங்கிலாந்து கொண்டாட்டத்திலும்...

 மொயின் அலி, மதுபான தொழில் சம்பந்தமான விளம்பரங்கை ஊக்கவிக்க விரும்பாதவர். மேலும் அணிவீரர்கள் கொண்டாட்டத்தின்போது மதுபானம் பயன்படுத்தினால் விலகி நிற்கும் குணம் கொண்டவர்.

இதற்கு சான்றாக 50 ஓவர் உலககோப்பை போட்டியை கூறலாம். சாம்பியன் பட்டம் வென்ற இங்கிலாந்து வீரர்கள் கோப்பையை பெற்றபோது சாம்பெயினை பீய்ச்சி அடித்து கொண்டாடினர். அப்போது மொயின் அலியும், அடில் ரசீத்தும் விலகி ஓடியது குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.