Header Ads

Header ADS

வயதானதாக உணர வைக்கிறது; 200வது போட்டி பற்றி ‛தல’ டோனி செல்வதென்ன

மும்பை, ஏப்.18-

‛‛சென்னை அணிக்காக 200 போட்டியில் விளையாடியது வயதானதாக உணர வைக்கிறது’’ என கேப்டன் ‛தல’ டோனி கூறினார். 

200வது போட்டியில் டோனி

 சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் டோனி அந்த அணிக்காக 200 போட்டிகளில் விளையாடியுள்ளார். பஞ்சாப்புக்கு எதிரான போட்டியில் இந்த மைல்கல்லை அவர் எட்டினார்.

இதில் சிறப்பாக செயல்பட்ட சென்னை அணி பஞ்சாப்பை எளிதாக வென்றது. இதன் மூலம் டோனிக்கு மறக்கமுடியாத போட்டியாக இது மாறியுள்ளது.

வயதானதாக உணர வைக்கிறது

சென்னை அணிக்காக 200வது போட்டிகள் விளையாடியது பற்றி டோனி மனம்திறந்து கூறியதாவது:

‘‛சென்னை அணிக்காக 200 போட்டிகளில் விளையாடி உள்ளேன். இது எனக்கு வயதாகிவிட்டதாக உணர வைக்கிறது. 2008 முதல் சென்னை அணிக்காக விளையாடி வருகிறேன். தென்ஆப்பிரிக்கா, துபாய் ஆகிய இடங்களில் விளையாடி தற்போது இந்தியாவிலும் விளையாடுகிறேன்.  இருப்பினும் மும்பை ஒருபோதும் எங்களது ேஹாம் கிரவுண்ட்’ ஆக மாறும் என்பதை நினைத்து பார்த்தது இல்லை.  மும்பை மைதானம் அருமையாக உள்ளது’’

இவ்வாறு அவர் கூறினார்.

தனிச்சிறப்பு

சென்னை அணிக்காக முதன் முதலில் 2008 ஏப்., 19ல் பஞ்சாப் அணிக்கு எதிராக கேப்டன் டோனி களமிறங்கினார். தற்போது அவர் 200 வது போட்டியை அந்த அணிக்கு எதிர்கொண்டு விளையாடியது தனிச்சிறப்பாக உள்ளது.

இதுவரை டோனி தலைமையில் சென்னை அணி 3 முறை ஐ.பி.எல். சாம்பியன் பட்டத்தையும், 2 முறை சாம்பியன் லீக் பட்டத்தையும் வென்றது குறிப்பிடத்தக்கது. 


No comments

Powered by Blogger.