Header Ads

Header ADS

2011 உலககோப்பை வென்றதில் ரியல் ஹீரோ இவர் தான்: யாரை சொல்கிறார் காம்பீர்

புதுடெல்லி, ஏப்.5-

கவுதம் காம்பீர்

28 ஆண்டுகளுக்கு பிறகு 2011ல் இந்தியா மீண்டும் உலககோப்பை வென்றது. இந்தியா 2வது முறையாக உலககோப்பை வென்றதன் 10ம் ஆண்டு கொண்டாட்டம் கொண்டாடப்பட்ட நிலையில் இந்தியாவின் ரியல் ஹீரோ யுவராஜ் சிங் தான் என இந்தியாவின் முன்னாள் தொடக்க ஆட்டக்காரர் கவுதம் காம்பீர் கூறினார். 

உலககோப்பை வென்ற இந்தியா

2011ம் ஆண்டு நடந்த 50 ஓவர் உலககோப்பை கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டத்தில் இந்தியா–இலங்கை அணிகள் மோதின. முதலில் பேட் செய்த இலங்கை 275 ரன்கள் குவித்தது. தொடக்க ஆட்டக்காரர்களான சேவக் ரன் எதுவும் எடுக்காமலும், ‛கிரிக்கெட் கடவுள்’ சச்சின் 18 ரன்களுக்கும் ஆட்டமிழந்தனர். விராட்கோலி 35 ரன்கள் எடுத்து விக்கெட் பறிகொடுத்தார்.ஒருகட்டத்தில் 22 ஓவர் முடிந்து இருக்க இந்தியா 3 விக்கெட் இழப்பிற்கு 114 ரன்களுக்கு தடுமாறியது.

உலககோப்பை பைனலில் காம்பீர், டோனி

பொறுப்புடன் ஆடிய கவுதம் காம்பீருடன்  கேப்டன் டோனி இணைந்தார். காம்பீர்–டோனி பார்ட்னர்ஷிப் 109 ரன்கள் குவித்த நிலையில் கவுதம் காம்பீர் 97 ரன்களில் ஆட்டமிழந்தார்.  இறுதியில் டோனி சிக்சர் அடிக்க 48.2 ஓவர்களில் இந்தியா 4 விக்கெட் இழப்புக்கு 277 ரன்கள் குவித்து வென்றது. 28 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் இந்தியா உலககோப்பையை உச்சி முகர்ந்தது.

டோனியின் சிக்சர்

இந்த போட்டியில் இறுதி வரை ஆட்டமிழக்காமல் டோனி 91 ரன், யுவராஜ் சிங் 21 ரன்கள் குவித்து களத்தில் நின்றனர்.
டோனி அடித்த சிக்ஸ், எதிர்முனையில் யுவராஜ் சிங்

 இறுதிகட்டத்தில் இலங்கையின் குலசேகராவின் பந்தில் டோனி அடித்த சிக்சரையும், ரவி சாஸ்திரியின் வர்ணனைையும் இன்று வரை ரசிகர்கள் மறக்கவில்லை. இந்த வர்ணனையுடன், டோனி விளாசிய சிக்சரை எப்போது பார்த்தாலும் உடல் புல்லரித்து போகும்.

10ம் ஆண்டு கொண்டாட்டம்

இந்நிலையில் தான் இந்தியா உலககோப்பை வென்றதன் 10ம் ஆண்டு கொண்டாட்டம் கொண்டாடப்பட்டு வருகிறது.  ரசிகர்கள் டோனி அடித்த சிக்சர் வீடியோவை இணையத்தில் தேடி பதிவிறக்கம் செய்து. சமூகவலைதளங்களில் பதிவிட்டு மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டனர்.

இறுதியில் சிக்ஸ் அடித்த டோனி

முன்னாள், இந்நாள் வீரர்களும் வாழ்த்துகள் பரிமாறி கொண்டதோடு, உலகோப்பை அணியில் இடம்பிடித்த வீரர்களும் அப்போது நடந்த சுவாரசிய தகவல்களை பகிர்ந்து வருகின்றனர்.

காம்பீர் எதிர்ப்பு

இதற்கு கவுதம் காம்பீர் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இந்தியா உலககோப்பை வென்றதில் டோனியை மட்டும் கொண்டாடுவதில் சரியாக இருக்காது என அவர் கூறினார். இதுபற்றி கவுதம் காம்பீர் கூறியதாவது:

வருத்தம் அளிக்கிறது

கிரிக்கெட் என்பது தனிப்பட்ட நபரின் விளையாட்டு இல்லை. உலககோப்பை வென்ற இந்திய அணியை பொறுத்தமட்டில் 13 முதல் 14 வீரர்களுக்கு உரிய அங்கீகாரம் பாராட்டு கிடைக்கவில்லை. முனாப் பட்டேல், ஹர்பஜன் சிங் நன்றாக பந்து வீசினர். முதல் போட்டியில் விராட் கோலி சதம் விளாசினார். பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் சுரேஷ் ரெய்னா சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இவர்களின் பங்களிப்பு நம்பமுடியாத வகையில் இருந்தது.

தொடர் நாயகன் விருதுடன் யுவராஜ் சிங்

நான் 10 ஆண்டுக்கு முன்பு நடந்தை இன்று திரும்பி பார்க்கிறேன். உலககோப்பை போட்டியில் ரியல் ஹீரோவாக ஜொலித்து தொடர் நாயகன் விருது வாங்கிய யுவராஜ் சிங்கை இன்று ரசிகர்கள் கொண்டாடவில்லை. அவரது பங்களிப்பு குறித்து யாரும் பேசவில்லை. ஆனால் டோனி அடித்த ஒரு சிக்சரை மட்டும் பேசி வருகிறார்கள். இது வருத்தம் அளிக்கிறது.

யுவராஜ் சிங்கிற்கே பெருமை

உலககோப்பை வென்றதில் உங்களுக்கும் உரிய புகழ் கிடைக்கவில்லை என்று நிறைய பேர் என்னிடம் கேட்டுள்ளனர். ஆனால் என்னை பொறுத்தவரையில் கொண்டாடப்பட வேண்டிய வீரர் யுவராஜ் சிங் தான். ஏனென்றால் இந்தியா வென்ற 20 ஓவர் மற்றும் 50 ஓவர் உலகோப்பை தொடரில் ஆல்ரவுண்டராக ஜொலித்தவர் அவர் தான். அவரது பங்களிப்பு கிடைக்காமல் இருந்திருந்தால் 2011 உலககோப்பையை இந்தியா வென்று இருக்காது.

யுவராஜ் சிங், காம்பீர்

நான் தனிப்பட்ட முறையில் யாரையும் மனதில் வைத்து இதை பேசவில்லை. ஒன்றை மட்டும் புரிந்து கொள்ள வேண்டும். கிரிக்கெட் என்பது தனிப்பட்ட நபரின் ஆட்டத்தை சார்ந்தது கிடையாது. அனைத்து வீரர்களின் பங்களிப்போடு விளையாடுவது தான் கிரிக்கெட். ஆனால் 20 ஓவர், 50 ஓவர் உலககோப்பைகளை இந்தியா வென்றதன் பின்னணியில் ஒட்டுமொத்த அணியை விடுத்து ஒருவீரரை மட்டும் புகழ வேண்டும் என்றால் அந்த பெருமை நிச்சயம் யுவராஜ் சிங்கை தான் சேர வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

No comments

Powered by Blogger.