ரூ.2.20 லட்சம் ஊதியத்தில் எழுத்து தேர்வில்லாமல் மத்திய அரசு பணி
புதுடெல்லி, ஏப்.29-
மத்திய அரசின் வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம் கட்டுப்பாட்டில் உள்ள இந்திய வெளிநாட்டு வர்த்தக நிறுவனத்தில் (IIFT) கல்வி, பயிற்சி வழங்கவும், ஆய்வு மேற்கொள்ளவும் பேராசிரியர்கள் தேவைப்படுகிறார்கள். இதற்கான காலி பணியிட அறிவிப்புகள் வெளியாகியுள்ளன.
இதுபற்றிய முழுவிபரங்களை நம் இணையதளமான www.newsthendral.com பார்த்து தெரிந்து கொள்ளுங்கள். அதன் விபரம் வருமாறு
காலி பணியிடம்
பேராசிரியர்கள் – 04
உதவி பேராசிரியர்கள் – 08
ஊதியம்
பேராசிரியர்களுக்கு மாதம் ரூ.1.59 லட்சம் முதல் ரூ.2.20 லட்சம் கிடைக்கும்.
உதவி பேராசிரியர்களுக்கு மாதம் 68,900 முதல் 1.17 லட்சம் வரை கிடைக்கும்.
கல்வி தகுதி
* பேராசிரியர் பணிக்கு அங்கீகரிக்கப்பட்ட கல்லுாரியில் P.hd முடித்திருக்க வேண்டும். உதவி பேராசிரியர், கூடுதல் பேராசிரியர், பேராசிரியர் அல்லது ஆராய்ச்சியாளராக 10 ஆண்டு அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
* உதவி பேராசிரியர் பணிக்கு அங்கீகரிக்கப்பட்ட கல்லுாரியில் மாஸ்டர் டிகிரி முடித்து பேராசிரியராக 2 ஆண்டு அனுபவம் கொண்டிருக்க வேண்டும். NET/SET/SLET ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு முறை
பதிவாளர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்வர்.
விண்ணப்ப முறை
தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் 26.05.2021 அன்று மாலை 5 மணி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
மேலும் கூடுதல் விபரங்களை https://tedu.iift.ac.in/iift/docs/vacanciesdoc/FAC_2020_24062020.pdf இந்த லிங்க் கிளிக் செய்து அறிந்து கொள்ளுங்கள்.
தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் http://campus360.iift.ac.in/API_FAC_Reg.asp இந்த லிங்க் செய்து விண்ணப்பிக்கலாம்.
No comments