Header Ads

Header ADS

மேக்ஸ்வெல் அடித்த ‘அடேங்கப்பா’ சிக்ஸர்; 100 மீட்டருக்கு அப்பால் விழுந்தது

சென்னை, ஏப். 11-

சென்னையில் நடந்த மும்பைக்கு எதிரான முதல் ஐ.பி.எல்., போட்டியில் பெங்களூரு அதிரடி மன்னன் மேக்ஸ்வெல் விளாசிய சிக்ஸர் 100 மீட்டர் துாரம் பறந்தது. இந்த வீடியோ தற்போது இணையத்தை கலக்குகிறது.

கோலி அணி வெற்றி

சென்னையில் நேற்று முன்தினம் தொடங்கிய ஐ.பி.எல். முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ், பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிகள் மோதின.

(வீடியோ கீழே இணைக்கப்பட்டுள்ளது)

முதலில் பேட்டிங் செய்த மும்பை அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 159 ரன்கள் சேர்த்தது. இந்த இலக்கை விரட்டிய பெங்களூரு அணி 8 விக்கெட்டுகளை பறிகொடுத்த நிலையில், கடைசி பந்தில் வெற்றியை சுவைத்தது.

மேக்ஸ்வெல் அதிரடி

இப்போட்டியில் ரூ.14.25 கோடிக்கு பெங்களூரு அணியால் ஏலம் எடுக்கப்பட்ட மேக்ஸ்வெல் 28 பந்துகளில் 39 ரன்கள் எடுத்தார்.  இவரது ஆட்டம் தான் பெங்களூரு வெற்றிக்கு உதவியது.

தொடக்கம் முதலே அடித்து ஆடிய மேக்ஸ்வெல் 3 பவுண்டரிகள், 2 சிக்சர்கள் விளாசினார்.  ‛ரிவர்ஸ் ஸ்வீப்’ ஷாட்டுகள் அடித்து பாசக்கார ரசிகர்களை பரவசப்படுத்தினார்.

குர்னால் பாண்ட்யா வீசிய 11வது ஓவரில் இமாலய சிக்ஸர் ஒன்றை மேக்ஸ்வெல் அடித்தார். அவர் விளாசிய பந்து 100 மீட்டருக்கு அப்பால் மைதானத்தின் மேற்கூரையில் விழுந்தது. இதை எதிர்முனையில் நின்ற கோலி பிரமித்து பார்த்தார்.

இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. ஆர்.சி.பி. ரசிகர்கள் வீடியோவிற்கு லைக், கமெண்ட்களை போட்டு தெறிக்கவிடுகின்றனர்.

வீடியோவை பார்க்க... கிளிக் செய்யவும்...


––––––––––––––––––––––––––––––––––––––––––––––––––
சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணியின் வெறித்தனமான பயிற்சி வீடியோவை பார்க்க...

#https://www.newsthendral.com/2021/04/blog-post.html


No comments

Powered by Blogger.