ரோகித்தின் அடுத்த விழிப்புணர்வு; பிளாஸ்டிக் இல்லா பெருங்கடல்
சென்னை, ஏப்.16-
ரோகித் விழிப்புணர்வு
ஐ.பி.எல். கிரிக்கெட்டில் நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் முதல் போட்டியில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியிடம் தோற்றது. 2வது போட்டியில் கொல்கத்தா அணியை வென்றது. இந்த போட்டிகளின்போது மும்பை கேப்டன் ரோகித் ஷர்மா, தனது ஷூ மூலம் வனவிலங்கு மற்றும் சுற்றுச்சூழலை பாதுகாக்க வேண்டும் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
‛save the rhino’ வாசக ஷூ அணிந்த ரோகித் |
பெங்களூருவுக்கு எதிரான முதல் போட்டியில் அழிந்து வரும் ஒற்றை கொம்புடைய காண்டாமிருகத்தை பாதுகாக்க வேண்டும்’ என்பதை வலியுறுத்தினார். இதுதொடர்பாக அவரது ஷூவில் ‘save the rhino’ என எழுதப்பட்டு இருந்தது. இது ரசிகர்கள், சமூகஆர்வலர்கள், வீரர்கள் மத்தியில் பெரும்பாராட்டு பெற்றது.
பிளாஸ்டிக் இல்லா பெருங்கடல்
இந்நிலையில் கொல்கத்தாவுக்கு எதிரான போட்டியில் ரோகித் ஷர்மா நீலம், பச்சை கலந்த நிறத்தில் ஷூ அணிந்திருந்தார். அதில், ‛plastic free ocean’ என எழுதப்பட்டு இருந்தது. இதன்மூலம் ‛பிளாஸ்டிக் இல்லா பெருங்கடல் உருவாக் உருவாக்க அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்பதை வலியுறுத்தினார்.
‛plastic free ocean’ வாசக ஷூ அணிந்திருந்த ரோகித் |
இதுபற்றி அவர் தனது டுவிட்டர் பக்கத்தில், ‘‘என் மனதுக்கு நெருக்கமான இன்னொரு பிரச்னை. இது என்னை தாக்கியது. நம்முடைய 100 சதவீத கட்டுப்பாட்டால் இதை பழைய நிலைக்கு மீட்டு கொண்டு வர முடியும். இப்பிரச்னையை நான் செல்லும் இடங்களுக்கு எடுத்து சென்று விழிப்புணர்வு ஏற்படுத்துவேன். இதை என் ஒருவனால் சரிசெய்ய முடியாது. நீங்களும் என்னுடன் கைகோர்க்க வேண்டும். வாருங்கள் நம் பெருங்கடலை மீண்டும் துாய்மையானதாக மாற்றுவோம்’’ என கூறியுள்ளார்.
No comments