ஐ.பி.எல்.லில். புதிய அணி சாம்பியன்; ரவிசாஸ்திரி வெளிப்படை
ஆமதாபாத், ஏப்.29-
டிவிலியர்ஸ் அதிரடி
முதலில் பேட் செய்த பெங்களூரு அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 171 ரன்கள் குவித்தது. அதிரடியாக விளையாடிய டிவிலியர்ஸ் 42 பந்துகளில் அதிரடியாக ஆடி 75 ரன்கள் குவித்து அசத்தினார்.
ஒரு ரன்னில் வெற்றி
தொடர்ந்து களம் இறங்கிய டில்லி அணிக்கு தவான் 6 ரன், ஸ்டீவ் ஸ்மித் 4 ரன், பிரித்வி ஷா 21 ரன், ஸ்டாய்னிஸ் 22 ரன்களுக்கு அவுட்டாகினர். கேப்டன் ரிஷாப் பண்ட் பொறுமையாக விளையாடி அணியை சரிவில் இருந்து மீட்க, ஹிட்மயர் ருத்ரதாண்டவம் ஆடினார்.
இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் 170 ரன்கள் எடுத்த நிலையில் ஒரு ரன் வித்தியாசத்தில் பெங்களூரு த்ரில் வெற்றி பெற்றது. டெல்லி அணி தரப்பி்ல் ரிஷாப் பண்ட் 58 ரன் (48 பந்து), ஹிட்மயர் 51 ரன்கள் (25 பந்து) எடுத்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
புதிய சாம்பியன்
இந்த போட்டியை மையமாக வைத்து இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி டுவிட்டரில் கருத்து பதிவிட்டுள்ளார்.
கோலி, ரிஷாப் பண்ட் இணைந்து இருக்கும் படத்தை பதிவிட்டு வெளியிட்ட செய்தியில், ‘‘மிகச்சிறந்த போட்டி. ஐ.பி.எல். 2021ல் புதிய அணி சாம்பியன் பட்டம் வெல்வதற்கான விதைகள் விதைக்கப்படுகின்றன’’ எனக்கூறியுள்ளார்.
பெங்களூரு, டெல்லிக்கு ஆதரவா
ஐ.பி.எல்.லை பொறுத்தமட்டில் தற்போது 14வது சீசன் நடக்கிறது. இதில் பெங்களூரு, டெல்லி மற்றும் பஞ்சாப் அணிகள் மட்டும் இதுவரை சாம்பியன் பட்டம் வெல்லவில்லை. தற்போதைய சீசனில் பஞ்சாப்பிற்கு சிறப்பானதாக அமையவில்லை. அந்த அணி 6 போட்டிகளில் 2ல் வென்று 4 புள்ளிகளுடன் புள்ளிபட்டியலில் 6வது இடத்தில் உள்ளது.
ஆனால் பெங்களூரு, டெல்லி அணிகள் பிரமாதமாக விளையாடி வருகின்றன. இதுவரை 6 போட்டிகளில் விளையாடியுள்ள பெங்களூரு அணி 5 போட்டிகளில் வெற்றி பெற்று 10 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் முதலிடத்திலும், 6 போட்டியில் 4ல் வென்று 8 புள்ளிகளுடன் டெல்லி அணி 8 புள்ளிகளுடன் 3ம் இடத்திலும் .உள்ளது. இதன்மூலம் 2021 ஐ.பி.எல். பட்டத்தை பெங்களூரு அல்லது டெல்லி அணிகளில் ஒன்று வெல்லும் என்பதை மறைமுகமாக ரவிசாஸ்திரி குறிப்பிட்டுள்ளார்.
No comments