ரோஹித்-சூர்யகுமார், கோலி-மேக்ஸ்வெல் சிறந்த ஜோடி எது: ஆகாஷ் சோப்ரா ஒப்பீடு
மும்பை, ஏப். 9-
ஆகாஷ் சோப்ரா |
இன்று தொடங்கும் ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் மும்பை-பெங்களூரு அணிகள் மோதும் நிலையில் ரோஹித்ஷர்மா-சூர்யகுமார் யாதவ், கோலி-மேக்ஸ்வெல் ஜோடிகளை ஒப்பிட்டு ஆகாஷ் சோப்ரா கருத்து தெரிவித்துள்ளார்.
அதன் விபரம் வருமாறு
ரோஹித்-கோலி மோதல்
ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி சென்னையில் இன்று தொடங்குகிறது. இரவு 7.30 மணிக்கு சென்னையில் தொடங்கும் முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் அணியும், பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியும் மோதுகின்றன.
கோலி-ரோஹித் |
இந்த நிலையில் மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ரோஹித் ஷர்மா-சூர்யகுமார் ஜோடி, பெங்களூரு அணியின் கேப்டன் கோலி-மேக்ஸ்வெல் ஆகியோரின் பார்ட்னர்ஷிப் குறித்து ஆகாஷ் சோப்ரா ஒப்பீடு செய்துள்ளார். இதுபற்றி இந்திய அணியின் முன்னாள் வீரரும், கிரிக்கெட் வர்ணனையாளருமான ஆகாஷ் சோப்ரா கூறியுள்ளதாவது:
அதிக ரன்கள் யார் குவிப்பர்
ஐ.பி.எல்.லை பொறுத்தமட்டில் மும்பை இந்தியன்ஸ் அணி சரியான கலவையில் உள்ளது. அந்த அணியின் பேட்டிங் வரிசை மிரட்டலாக உள்ளது. குறிப்பாக கேப்டன் ரோஹித் ஷர்மா, சூர்யகுமார் யாதவ் ஆகியோர் இணைந்து நீண்டநேரம் களத்தில் நின்றால் எதிரணிக்கு இமாலய இலக்கை நிர்ணயிக்கலாம். அதேபோல் பெங்களூரு கேப்டன் கோலி, மேக்ஸ்வெல் பார்ட்னர்ஷிப்பும் அருமையாக அமையலாம்.
ரோஹித்-சூர்யகுமார் யாதவ் |
இந்த 2 ஜோடிகளை ஒப்பிட்டு பார்த்தால் கோலி-மேக்ஸ்வெல் பார்ட்னர்ஷிப்பை காட்டிலும் ரோஹித்ஷர்மா-சூர்யகுமார் யாதவ் ஜோடி அதிக ரன்கள் குவிக்க வாய்ப்புள்ளது. அதேநேரத்தில் ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும். ரோஹித் ஷர்மா, சூர்யகுமார் யாதவ் இணை சேர்க்கும் ரன்களை கோலி ஒருவரால் கூட குவிக்க இயலும் என்பதையும் மறந்து விட கூடாது.
மேலும் ஒட்டுமொத்த அணிகளை ஒப்பிடும்போது மும்பை அணி சிறந்ததாக உள்ளது. இதனால் மும்பை இந்தியன்ஸ் அணி ஹாட்ரிக் முறையில் சாம்பியன் பட்டத்தை வெல்ல அதிக வாய்ப்புள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
No comments