Header Ads

Header ADS

நடிகர் விஷ்ணு விஷால், ஜுவாலா கட்டா திருமணம்; ஏப்., 22ல் நடக்கிறது


சென்னை, ஏப்.,14-

தமிழ் திரைப்பட நடிகர் விஷ்ணு விஷால், பேட்மிண்டன் வீராங்கனை ஜுவாலா கட்டாவை ஐதராபாத்தில் ஏப்.,22ல் திருமணம் செய்ய உள்ளார்.

நடிகர் விஷ்ணு விஷால்

தமிழில் வெண்ணிலா கபடிகுழு, நீர்ப்பறவை, ராட்சசன் உள்ளிட்ட படங்களில் நடித்தவர் விஷ்ணு விஷால். இந்திய பேட்மிண்டன் வீராங்கணை ஹூவாலா கட்டா. இவர்கள் இருவரும் காதலித்து வந்தனர். இருவருக்கும் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் நிச்சயத்தார்த்தம் நடந்தது.


இந்நிலையில் விஷ்னு விஷால்–ஜூவாலா கட்டா திருமணம் ஏப்.22ல் நடக்கிறது. திருமணத்தில் இருவரின் குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய உறவினர்கள் மட்டும் கலந்து கொள்ள உள்ளனர்.

பத்திரிகை

திருமண பத்திரிகையுடன் விஷ்ணு விஷால், ஜுவாலா கட்டா ஆகியோர் கூட்டாக அறிக்கை வெளியிட்டுள்ளனர்.


அதில்,  ‛‛குடும்பத்தினரின் ஆசீர்வாதத்துடன் ஏப்.22ல் நாங்கள் திருமணம் செய்ய உள்ளோம் என்பதை அனைவரிடமும் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி கொள்கிறோம். இவ்வளவு காலம் எங்கள் மீது நீங்கள் பொழிந்த அன்புக்கு நன்றி’’ என கூறியுள்ளனர்.

2வது திருமணம்

இவர்கள் 2 பேருக்கும் இது இரண்டாவது திருமணம். விஷ்னு விஷாலின் முதல் திருமணம் விவாகரத்தில் முடிந்தது. கருத்துவேறுபாட்டால் 2018ல் கணவன்-மனைவி முறைப்படி விவாகரத்து பெற்றனர். இந்த தம்பதிக்கு ஒரு மகன் உள்ளார்.

அதேபோல் ஜூவாலா கட்டாவும் 2011 ம் ஆண்டு சேத்தன் ஆனந்த் என்பவரை விவாகரத்து செய்தது குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.