ஆக்சிஜன் வாங்க பிரட்லீ ரூ.41 லட்சம் நிதி; இந்தியா எனது 2வது வீடு என பெருமிதம்
புதுடெல்லி, ஏப்.28-
கொரோனாவின் கோரப்பிடியில் இந்தியா சிக்கித்தவிக்கும் மருத்துவமனைகள் ஆக்சிஜன் வாங்க ரூ.41 லட்சத்தை ஆஸ்திரேலியாவின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் பிரட்லீ வழங்கினார்.
நிதி உதவி
இந்தியாவில் கொரோனாவின் 2வது அலை விஸ்வரூபம் எடுத்துள்ளது. கொரோனா நோயாளிகளுக்கு வழங்க மருத்துவமனைகளில் ஆக்சிஜன் தட்டுப்பாடு நிலவுகிறது. இதனால் பலர் மரணமடைந்து வருகிறார்கள். இதை கருத்தில் கொண்டு ஐ.பி.எல்.லில் கொல்கத்தா அணிக்காக விளையாடும் ஆஸ்திரேலியாவின் ஆல்ரவுண்டர் பாட் கம்மின்ஸ் ரூ.37 லட்சத்தை பிரதமரின் நிவாரண நிதிக்கு வழங்கினார். பிறவீரர்களையும் பங்களிப்பு செய்யும்படி அவர் வலியுறுத்தி இருந்தார்.
பாட் கம்மின்ஸ், பிரட்லீ |
இந்தியா 2வது வீடு
இதுபற்றி அவர் தனது டுவீட்டர் பக்கத்தில் ‛‛இந்தியாவை எனது இரண்டாவது வீடாக கருதுகிறேன். நான் ஆஸ்திரேலியாவுக்காக விளையாடியபோதும், ஓய்வு பெற்றபோதும் இந்திய மக்கள் என்மீது தொடர்ந்து அன்பு மற்றும் பாசத்தை காட்டி வருகிறார்கள்.
இந்தியாவுக்கு எப்போதும் என்மனதில் தனிஇடம் உண்டு. ஆனால் கொரோனால் அவர்கள் பாதிக்கப்படுவது எனக்கு அதிக வருத்தத்தை தருகிறது. இந்திய மருத்துவமனைகளில் ஆக்சிஜன் வாங்க ஒரு பிட்காயினை நிவாரண நிதியாக வழங்குகிறேன்’’ எனக்கூறியுள்ளார்.
பிரட்லீயின் உதவிக்கு ரசிகர்கள் உள்பட பல்வேறு தரப்பினர் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.
No comments