‘கொரோனா கிரிக்கெட்’ அதிர்ஷ்டம்தாங்க... மனம் திறக்கும் ‘ஹிட்மேன்’
சென்னை, ஏப். 10-
ரோஹித் ஷர்மா |
மும்பை-பெங்களூரு மோதல்
நடப்பாண்டுக்கான ஐ.பி.எல். திருவிழா துவங்கிவிட்டது. நேற்று நடந்த முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் அணியும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் மல்லுக்கட்டின.
கோலி-ரோஹித் |
முன்னதாக, கொரோனா காலம் குறித்தும், அதில் பொதுமக்கள் படும் கஷ்டங்கள் குறித்தும் மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ரோஹித் ஷர்மா பேசினார். அப்போது, கொரோனா கண்காணிப்பு வளையத்தில் உள்ள கிரிக்கெட் வீரர்களுக்கு மனஉளைச்சல் ஏற்படலாம் என பல்வேறு தரப்பினர் கூறி வந்த நிலையில், ரோஹித் ஷர்மாவோ மாறுபட்ட கருத்தை தெரிவித்துள்ளார்.
அவர் பேசிய வீடியோ மும்பை இந்தியன்ஸ் அணியின் டுவிட்டர் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது. அதில் ரோஹித் ஷர்மா கூறியுள்ளதாவது:
அதிர்ஷ்டசாலிகள் தான்
கொரோனா காலம் ஏராளமான பொதுமக்களுக்கு மிகவும் கஷ்டமானதாக உள்ளது. நிறைய மக்களால் வேலைக்கு செல்ல முடியவில்லை. பலருக்கு தங்கள் விருப்ப பணியை மேற்கொள்ள இயலவில்லை. இதை பார்க்கும் போது நாங்கள் (கிரிக்கெட் வீரர்கள்) அதிர்ஷ்டசாலிகள் தான். ஏனென்றால் நாங்கள் விரும்பும் கிரிக்கெட்டை இப்போதும் கூட விளையாட முடிகிறது. இது மகிழ்ச்சி அளிக்கிறது.
மேலும் ஓய்வறையில் வீரர்கள் ஒன்றாக நேரம் செலவிடுவதற்கான வாய்ப்பை கொரோனா காலம் ஏற்படுத்தி தந்துள்ளது. இதனால் வீரர்கள் இடையே அதிகப்படியான புரிதலை உருவாகியுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
No comments