டாஸ் நாணயத்தை திருடினாரா சாம்சன்; வீடியோ வெளியானதால் விளக்கம்
மும்பை, ஏப்.15-
பஞ்சாப்புக்கு எதிரான போட்டியில் டாஸ் நாணயத்தை ராஜஸ்தான் அணி கேப்டன் சஞ்சு சாம்சன் தனது பாக்கெட்டில் வைத்து எடுத்து கொள்ள முயன்றார். இதுதொடர்பான வீடியா வைரலான நிலையில் சஞ்சு சாம்சன் விளக்கம் அளித்துள்ளார்.
பஞ்சாப்-ராஜஸ்தான் மோதல்
ஐ.பி.எல். கிரிக்கெட்டில் நடந்த 4வது போட்டியில் கே.எல். ராகுல் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியும், சஞ்சு சாம்சன் வழிநடத்திய ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதின.
முதலில் பேட் செய்த பஞ்சாப் அணி பட்டையை கிளப்பியது. 20 ஓவர் முடிவில் 221 ரன்கள் குவித்தது. கேப்டன் கே.எல். ராகுல் 50 பந்துகளில் 91 ரன்கள் (7 பவுண்டரி, 5 சிக்ஸ்)விளாசி அசத்தினார்.
சஞ்சு அசத்தல் சதம்
அடுத்து களம் கண்ட ராஜஸ்தான் அணியும் இமாலய இலக்கை எட்டி பிடிக்க முயன்றது. சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் வீழ்ந்தாலும் கேப்டன் சஞ்சு சாம்சன் நிலைத்து நின்று ஆடி 63 பந்துகளில் 113 ரன்கள் (12 பவுண்டரி, 7 சிக்ஸ்) குவித்தார்.
20வது ஓவரின் கடைசி பந்தில் 4 ரன்கள் தேவைப்பட்டபோது சிக்ஸ் அடிக்க முயன்று சஞ்சு சாம்சன் அவுட்டானார். இதனால் 4 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் அணி வென்றது. ஐ.பி.எல்.லில் சஞ்சு சாம்சன் முதல் முறையாக கேப்டன் பொறுப்பை ஏற்று ராஜஸ்தான் அணியை வழிநடத்தி சதம் அடித்தார்.
பாக்கெட்டில் டாஸ் நாணயம்
முன்னதாக போட்டியின் தொடக்கத்தில் கே.எல். ராகுல், சஞ்சு சாம்சன் டாஸ் போட் மைதானத்துக்குள் சென்றனர். சஞ்சு சாம்சன் நாணயம் சுண்டினார். டாஸ் வென்ற சஞ்சு சாம்சன் பவுலிங் தேர்வு செய்தார்.
அழகாக இருந்ததால் விரும்பினேன்
இதுதொடர்பான வீடியோ சமூகவலைதளங்களில் வெளியானது. பலர் கிண்டலாக கமெண்ட் செய்து வருகின்றனர். டாஸ் நாணயத்தை கையாடல் செய்த சாம்சன், கேப்டன் பொறுப்பு ஏற்ற முதல் போட்டி நினைவாக டாஸ் நாணயத்தை வைத்து கொள்ள விரும்பிய சாம்சன் என பலர் கமெண்ட் செய்து வருகிறார்கள்.
இதுபற்றி சஞ்சு சாம்சன் கூறுகையில், ‛‛டாஸ் போட பயன்படுத்திய நாணயம் பார்க்க அழகாக இருந்தது. இதனால் அதை எடுத்து கொள்ள விரும்பி பாக்கெட்டில் வைத்தேன். மேலும் நடுவரிடம் நாணயத்தை வைத்து கொள்ளலாமா என கேட்டேன். அதற்கு அவர் மறுப்பு தெரிவித்துவிட்டார். இதன் பின்னணியில் வேறு ஒன்றும் இல்லை’’ என்றார்.
No comments