Header Ads

Header ADS

வீடியோவை பார்த்து விடை சொல்லுங்க வாசகர்களே! இது எந்த இடம்?

நியூஸ் தென்றல் இணைய வாசகர்களே...!

மண்வாசம் பகுதிக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம். இந்த வீடியோ மூலம் உங்களுக்கு ஒரு போட்டி வைக்க விரும்புகிறோம். நீங்கள் காணும் இந்த வீடியோ காட்சியை வைத்து, சரியான இடத்தை சொன்னால் உங்களுக்கு ஒரு ‘சபாஷ்’ உண்டு. கண்டுபிடியுங்கள் பார்க்கலாம். (பதிலை காமெண்ட் பாக்ஸில் தெரிவிக்கவும்)


பசுமைப் போர்வை போர்த்திய மலைத்தொடர் இது. கார் முகிலும் மலை முகடும் உடல் தழுவி முத்த மழைப்பொழியும் எழில்மிகு பூமி இது. தரையில் துளிர்த்து தடித்து எழும்பிய மரங்கள் வானைத் தொட்டு கதை பேசுவதை இங்கு காணலாம்.

அரிய பறவைகளும் அதிசய விலங்குகளும் இங்கு அடைக்கலம் தேடும். சலசலக்கும் அருவிகளும் நீரோடைகளும் இனிய சங்கீதம் பாடும். திரும்பிய திசைகளில் மூலிகை தாவரங்கள் அசைந்தாடும்.



கண் காணும் இடமெங்கும் பல வண்ண மலர்கள் பூத்துக்குலுங்கும். குளிரோ நம் எலும்புகளை துளைக்கும். அந்த இடம் எந்த இடம்...?


No comments

Powered by Blogger.