Header Ads

Header ADS

எஸ்.பி.ஐ.யில் ரூ.31,450 மாத சம்பளத்தில் 5000 பணியிடம்



புதுடெல்லி, மே.12-

இந்தியாவில் செயல்பட்டு வரும் ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா (எஸ்.பி.ஐ.,) வங்கியில் Junior associates பணியிடங்கள் நிரப்பபட உள்ளன.  இதற்கான அறிவிப்பு முறைப்படி வெளியாகியுள்ளது. அதன் விபரம் வருமாறு:

காலி பணியிடம்

Junior Associates (Customer Support and Sales) - Clerk : 5000 (+454 Backlog vacancies)

ஊதியம்

குறைந்தபட்சம் ரூ.11,765 முதல் அதிகபட்சமாக ரூ.31,450 பெறலாம்.

கல்வி தகுதி

அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் மற்றும் கல்லுரியில் ஏதேனும் ஒரு பிரிவில் டிகிரி அல்லது அதற்கு சமமான படிப்பை முடித்திருக்க வேண்டும். கல்லூரி இறுதி ஆண்டு படிக்கும் மாணவர்களும் விண்ணப்பிக்கலாம்.

வயது வரம்பு

2021 ஏப்ரல் 1ந் தேதிப்படி குறைந்தப்பட்சம் 20 வயது நிரம்பியவராகவும், 28 வயதுக்கு மிகாமலும் இருக்க வேண்டும். அதேநேரத்தில் 02.04.1993க்கு முன்பும், 01.04.2001க்கு பிறகும் பிறந்திருக்க கூடாது. எஸ்.டி., எஸ்.டி., பிரிவினருக்கு வயது தளர்வுகள் உண்டு.

தேர்வு முறை

ஆன்லைன் தேர்வு

விண்ணப்ப கட்டணம்

எஸ்.சி., எஸ்.டி., பிரிவினருக்கு ரூ.125

பொது, ஓ.பி.சி. பிரிவினருக்கு ரூ.750

விண்ணப்ப முறை

விருப்பம் மற்றும் தகுதி உள்ளவர்கள் 17.05.2021க்குள்(திங்கட்கிழமை) விண்ணப்பிக்கலாம். மேலும் இதுபற்றிய கூடுதல் விபரங்களை https://www.sbi.co.in/documents/77530/11154687/060421-Detailed_Advertisement_JA_2021.pdf/df0c82ff-afdd-0ab5-af90-027b7fb90818?t=1619441279335 இங்கு கிளிக் செய்து அறிந்து கொள்ளலாம்.

விண்ணப்பிக்க விரும்புவோர் https://ibpsonline.ibps.in/sbijascapr21/ இந்த லிங்கை கிளிக் செய்து விண்ணப்பத்தை பூர்த்தி செய்து பயன்பெறலாம்.

No comments

Powered by Blogger.