கொரோனா நிவாரணத்துக்கு நடிகர் விக்ரம் ரூ.30 லட்சம் நிதி உதவி
சென்னை, மே 18-
கொரோனா நிவாரணத்துக்காக நடிகர் விக்ரம் முதல்-அமைச்சர் நிவாரண நிதிக்கு ரூ.30 லட்சம் வழங்கினார்.
கொரோனா 2ம் அலை
இந்தியாவில் கொரோனா 2வது அலை கோரத்தாண்டவம் ஆடுகிறது. இதற்கு தமிழகமும் விதிவிலக்கல்ல. தினமும் 30 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டு வருகிறார். 250க்கும் அதிகமானவர்கள் பலியாகி வருகிறார்கள்.
கொரோனா பரவலை தடுக்க மத்திய, மாநில அரசுகள் தீவிர நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றன. இந்த நிலையில் கொரோனா பரவலை தடுக்க நிதி உதவி செய்யும்படி தமிழக முதல்-அமைச்சர் ஸ்டாலின் கோரிக்கை வைத்தார்.
விக்ரம் ரூ.30 லட்சம்
இதை ஏற்று ஏராளமானவர்கள் நிதி உதவி செய்து வருகிறார்கள். அந்த வகையில் முதல்-அமைச்சர் நிவாரண நிதிக்கு நடிகர் சியான் விக்ரம் ரூ.30 லட்சம் வழங்கியுள்ளார்.
முன்னதாக நடிகர் ரஜினி, அஜித், சூர்யா, கார்த்தி, சிவக்குமார், ஜெயம்ரவி, உதயநிதி ஸ்டாலின், சிவக்கார்த்திகேயன், இயக்குனர்களான சங்கர், வெற்றி மாறன், ஏ.ஆர்.முருகதாஸ் ஆகியோர் நிதி உதவி செய்தது குறிப்பிடத்தக்கது.
No comments