லிவ்-இன்-ரிலேசன்ஷிப்; பஞ்சாப் ஐகோர்ட் சொல்வது என்ன
சண்டிகர், மே 19-
திருமணம் செய்யாமல் சேர்ந்து வாழ்வது (லிவ்-இன்-ரிலேசன்ஷிப்) என்பது ஒழுக்கரீதியாகவும், சமூக ரீதியாகவும் ஏற்றுக்கொள்ள முடியாது என பஞ்சாப்-ஹரியானா ஐகோர்ட் கூறியது.
காதல் ஜோடி ஓட்டம்
பஞ்சாப்பை சேர்ந்தவர் குர்விந்தர் சிங் (வயது 22). இவரும் லூதியானாவை சேர்ந்த குல்சா குமாரி (19) என்பவரும் காதலித்து வருகின்றனர்.
இதற்கு குல்சா குமாரியின் குடும்பத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து இருவரும் வீட்டை விட்டு வெளியேறினர். திருமணம் செய்து கொள்ள முயன்றனர்.
லிவ்-இன்-ரிலேசன்ஷிப்
குல்சா குமாரி 18 வயது நிரம்பியவர் தான் என்பதை நிரூபிக்க அவரிடம் எந்த ஆவணங்களும் இல்லை. அனைத்து ஆவணங்களும் அவரது பெற்றோர் வீட்டில் உள்ளது.
இதனால் திருமணம் செய்து கொள்ள முடியாமல் இருவரும் சேர்ந்து(லிவ்-இன்-ரிலேசன்ஷிப்) தான்தாரன் மாவட்டத்தில் வாழ்ந்து வருகின்றனர்.
பாதுகாப்பு கோரி மனு
இந்நிலையில் குல்சா குமரியின் குடும்பத்தினர் அவரை தங்களுடன் வரும்படி அழைத்தனர்.
இதனால் பாதுகாப்பு கோரி குர்விந்தர் சிங், குல்சா குமாரி சார்பில் பஞ்சாப்-ஹரியானா ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
நீதிபதி சொன்னதென்ன
இந்த மனு மீது நீதிபதி மதன் விசாரணை நடத்தினார். அப்போது அவர், ‛‛மனுவின் அடிப்படை என்னவென்று பார்த்தால் திருமணம் செய்து கொள்ளாமல் வாழ (லிவ்-இன்-ரிலேசன்ஷிப்) பாதுகாப்பு கேட்கிறீர்கள் என்பதை புரிந்து கொள்ள முடிகிறது. இவ்வாறு வாழ்வது என்பது ஒழுக்கரீதியாகவும் சமூகரீதியாகவும் ஏற்றுக்கொள்ள முடியாதது. இதனால் பாதுகாப்பு எதுவும் வழங்க முடியாது ’’ எனக்கூறிய நீதிபதி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
No comments