மதுரை டீன் அதிரடி மாற்றம்; கொரோனா தாண்டவத்தை சமாளிப்பாரா புதிய டீன்
மதுரை, மே 17–
டீன் சங்குமணி |
கொரோனா தாண்டவத்துக்கு ஊடே மதுரை அரசு மருத்துவமனை டீன் திடீரென மாற்றப்பட்டுள்ளார். புதிதாக பொறுப்பேற்ற டீன் ஆரம்பித்த வேகத்தில் அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார்.
அதிரடி மாற்றம்
ஸ்டாலின் முதல்வரானதில் இருந்து அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். மக்கள் மனதில் இடம் பிடித்த அதிகாரிகளுக்கு முக்கிய பொறுப்புகளை வழங்கி அசத்தினார். நேற்று அரசு மருத்துவமனை டீன்கள் சிலரை திடீரென தமிழக அரசு அதிரடியாக மாற்றியது. இதில் மதுரை அரசு மருத்துவமனை டீனாக பணிபுரிந்த சங்குமணியும் ஒருவர்.
இவர் சிவகங்கை அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். இவருக்கு பதில், சிவகங்கை அரசு மருத்துவமனை டீன் ரத்தினவேல், மதுரை அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை டீனாக நியமிக்கப்பட்டுள்ளார்.
புதிய டீன் ரத்தினவேல் |
புதிய டீன் அதிரடி
இந்நிலையில் புதிய டீனாக பொறுப்பேற்றுள்ள ரத்தினவேல், பதியேற்ற கையோடு அதிரடி நடவடிக்கைகளை எடுக்கத் துவங்கியுள்ளார். தான் எதற்கு முக்கியத்துவம் கொடுப்பேன் என்ற விவரத்தை அவர் அறிவித்துள்ளார். அதன் விவரம் வருமாறு:
* மதுரை மக்களிடம் நீடிக்கும் கொரோனா குறித்த பீதி, அச்சத்தை போக்குவேன்.
* கொரோனாவிற்கு நிரந்தர தீர்வை தரும் தடுப்பூசிகளை 100 சதவீதம் மக்களிடம் எடுத்துச் செல்வேன்.
* கொரோனா தாக்குதலுக்கு ஊடே அனைத்து வகை சிறப்பு மருத்துவ வசதிகளையும் விரைவில் செயல்பட வைப்பேன்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
No comments