Header Ads

Header ADS

வைரலாகும் நயன்தாரா... விழிப்புணர்வு படத்தால் விழிபிதுங்கிய சோகம்...

சென்னை, மே. 19–



‘லேடி சூப்பர் ஸ்டார்’ என செல்லமாக அழைக்கப்படும் நடிகை நயன்தாரா கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டார். அவர் தடுப்பூசிப் பெறும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. உண்மையிலேயே அவர் தடுப்பூசி பெற்றாரா என்ற சர்ச்சையும் வெடித்துள்ளது.

கொரோனா தாண்டவம்

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு ருத்ர தாண்டவமாடுகிறது. தினசரி பாதிப்பில் இந்திய அளவில் தமிழகம் முதலிடம் பிடித்துள்ளது. தடுப்பூசியும், தனித்திருப்பதுமே தற்போதைக்கு தீர்வு என சுகாதாரத்துறை எச்சரிக்கை மணி அடிக்கிறது.

தடுப்பூசி பெற்ற நயன்தாரா.

இதற்கிடையே தடுப்பூசி செலுத்துவதை பல்வேறு பிரபலங்களும் மக்களிடம்  எடுத்துச் செல்கின்றனர். குறிப்பாக, நடிகர், நடிகைகள் தாங்கள் தடுப்பூசி செலுத்திக் கொள்ளும் புகைப்படத்தை இணையத்தில் பதிவு செய்து, தடுப்பு மருந்தை பெறும்படி மக்களை கேட்டுக்கொள்கின்றனர்.

இந்நிலையில் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் நடிகை நயன்தாரா தனது முதல் டோஸ் தடுப்பு மருந்தை பெற்றார். தான் தடுப்பூசி பெறும் படத்தை டுவிட்டர் பக்கத்தில் பதிவு செய்தார். அதில், ‘நான் தடுப்பூசி செலுத்திக்கொண்டேன். தயவு செய்து நீங்களும் தடுப்பூசி பெறுங்கள். தனித்திருங்கள்... பாதுகாப்பாக இருங்கள்...’ என்றும் குறிப்பிட்டிருந்தார்.

கேலிக்கூத்தான பரிதாபம்

மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் அவர் செய்த நல்ல காரியம், தற்போது இணையத்தில் கேலிகூத்தாக மாறிவிட்டது. ஏனென்றால் அவர் தடுப்பூசி பெறும் புகைப்படத்தில் ஊசி தெரியவில்லை. நர்ஸ் ஒருவர் வெறுங்கையை வைத்திருப்பது போன்று காட்சி அளிக்கிறது.

இதனால், ‘தடுப்பூசியே பெறாமல் நயன்தாரா போஸ் கொடுக்கிறார்...’, ‘இதிலும் நடிக்க வேண்டுமா...’ என்றெல்லாம் இணையவாசிகள் சர்ச்சையை கிளப்பி வருகின்றனர். தற்போது வரை 45 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு தான் தடுப்பூசி என்ற நிலை உள்ளது. இச்சூழலில் நயன்தாரா தடுப்பூசி பெற்றுள்ளதால், அதற்குள் அவருக்கு 45 வயதாகிவிட்டதா... என்றும் பலர் கிண்டல் செய்கின்றனர். இது ‘மீம்ஸ்’ ரூபத்தில் இணையத்தை வைரலாக்கியுள்ளது.




கொரோனா தாண்டவத்திற்கு ஊடே இந்த புகைப்படம் தான் இன்று நம்பர் ஒன் டிரண்டிங்கில் உள்ளது.

நயன்தாரா விளக்கம்


நிலைமை மோசமடைவதை உணர்ந்த நயன்தாரா தரப்பு, இதற்கு விளக்கமளித்துள்ளது. அதில், நயன்தாரா தடுப்பூசி செலுத்தியது உண்மை தான். ஆனால் புகைப்படத்தில் ஊசி தெரியவில்லை. மற்றபடி புகைப்படம் தடுப்பூசி செலுத்தும்போது எடுத்துக்கொண்டது தான், என தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments

Powered by Blogger.