ரஜினியை இயக்குகிறாரா ‛பிரேமம்’ இயக்குனர் அல்போன்ஸ்
சென்னை, மே 18-
‛சூப்பர் ஸ்டார்’ ரஜினியை இயக்க ‛பிரேமம்’ படப்புகழ் இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன் கதை எழுதிவைத்து முயற்சி மேற்கொண்டு வருகிறார்.
இயக்குனர் அல்போன்ஸ்
நடிகர் ரஜினியின் ‛அண்ணாத்த’ படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்தது. சிறுத்தை சிவா இயக்கும் இப்படத்தில் குஷ்பு, மீீனா, கீர்த்தி சுரேஷ், சூரி, சதீஷ் உள்ளிட்ட பிரபலங்கள் நடித்துள்ளன.
அல்போன்ஸ் புத்திரன் |
ரஜினியை இயக்க விருப்பம்
இதுபற்றி முகநூலில் ரசிகர் எழுப்பிய கேள்விக்கு, ‛‛சூப்பர் ஸ்டார் ரஜினியை வைத்து படம் இயக்க விரும்புகிறேன்’’ என அல்போன்ஸ் பதிலளித்தார்.
மேலும் ‛‛‛பிரேமம்’ படம் வெற்றி பெற்ற நிலையில் ரஜினிக்கு பொருத்தமாக கதை எழுதி இருக்கிறேன். இதுபற்றி அவரை சந்தித்து விவாதிக்க முயன்று வருகிறேன். அதற்கான வாய்ப்பு இன்னும் கிடைக்கவில்லை. இந்த வாய்ப்பு கிட்டினால் நிச்சயமாக ரஜினியை வைத்து படம் இயக்குவேன்’’ என கூறியுள்ளார்.
‛சூப்பர் டுப்பர் ஹிட்’
அல்போன்ஸ் கடந்த 2015ம் ஆண்டு இயக்கிய ‛பிரேமம்’ திரைப்படம் சூப்பர் டுப்பர் ஹிட் ஆனது. படத்தில் நடித்த நிவின்பாலி, சாய்பல்லவி, மடோனா செபாஸ்டியன், அனுபமா பரமேஸ்வரன் ஆகியோர் திரையுலகில் முன்னணி நடிகர், நடிகைகளாக மாறினர்.
நேரம், பிரேமம் படங்களை இயக்கிய அல்போன்ஸ் தற்போது நடிகர் பஹத் பாசில்லை வைத்து புதிய படம் ஒன்றை இயக்க உள்ளார். கொரோனா பரவல் காரணமாக இதற்கான படப்பிடிப்பு தள்ளிப்போயுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
No comments