டெல்டா பிளஸ் தாக்குதல்; தமிழகத்திற்கு 2ம் இடம்
டில்லி, ஜூன் 27–
தமிழகத்தில் இதுவரை 9 பேரை டெல்டா பிளஸ் வைரஸ் தாக்கியுள்ளது. மராட்டிய மாநிலத்திற்கு அடுத்தப்படியாக இவ்வைரஸ் தாக்குதல் பட்டியலில் தமிழகம் உள்ளது.
டெல்டா பிளஸ் பாதிப்பு
இங்கிலாந்து, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளை தொடர்ந்து டெல்டா பிளஸ் வைரஸ் இந்தியாவிற்குள் நுழைந்துவிட்டது. இதை சில தினங்களுக்கு முன்பு மத்திய அரசு உறுதி செய்தது. இருப்பினும், எந்த மாநிலத்தில் எவ்வளவு பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதில் குழப்பம் நிலவியது. தமிழகத்தில் இதுவரை மூன்று பேர் பாதிக்கப்பட்டிருப்பதாக முதல் தகவல் தெரிவித்தது.
இந்நிலையில் டெல்டா பிளஸ் குறித்து புதிய விளக்கத்தை மத்திய அரசு அளித்துள்ளது. அதில் நாடு முழுவதும் இதுவரை 48 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகம் 2ம் இடம்
இதில் 20 பாதிப்புகளுடன் முதல் இடத்தில் மராட்டியம் மாநிலம் உள்ளது. 9 பாதிப்புகளுடன் தமிழகம் 2ம் இடத்தில் உள்ளது. இதற்கு அடுத்தடுத்த இடங்களில் மத்திய பிரதேசம், கேரளா, பஞ்சாப், குஜராத் மாநிலங்கள் உள்ளன.
தமிழகத்தை பொறுத்தவரை சென்னை, மதுரை, காஞ்சிபுரத்தில் டெல்டா பிளஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. எனவே வருகின்ற நாட்களில் மக்கள் எச்சரிக்கையுடன் நடந்துகொள்ள வேண்டும் என மத்திய, மாநில அரசுகள் தெரிவித்துள்ளன.
No comments