Header Ads

Header ADS

அரசியலுக்கு வருகிறாரா நடிகர் விஜய்; இணையத்தில் வைரலாகும் போஸ்டரால் பரபரப்பு

 

திண்டுக்கல், ஜூன் 22-

நடிகர் இளையதளபதி விஜயை அரசியலுக்கு வரும்படி அழைப்பு விடுத்து திண்டுக்கல்லில் ரசிகர்கள் ஒட்டியுள்ள போஸ்டர் இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

பிறந்தநாள் போஸ்டர்

இளைய தளபதி விஜய் நேற்று தனது 47 வது பிறந்தநாளை கொண்டாடினார். ரசிகர்கள், சினிமா பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்தனர். பல்வேறு இடங்களில் விஜய் ரசிகர்கள் நலத்திட்ட உதவிகள் செய்தனர். மேலும் விஜய்க்கு வாழ்த்து தெரிவித்து போஸ்டர் ஒட்டியுள்ளனர்.

அந்த வகையில்  விஜயை அரசியலுக்கு வரும்படி அழைப்பு விடுத்து அவரது ரசிகர்கள் திண்டுக்கல்லில் போஸ்டர் ஒட்டியுள்ளனர். அதில் முதல்-அமைச்சர் ஸ்டாலின், விஜய்க்கு செங்கோல் கொடுப்பது போன்ற படம் இடம்பெற்றுள்ளது. மேலும் போஸ்டரில் ‛‛தம்பி வா... தலைமை ஏற்க வா’’ என விஜயை, ஸ்டாலின் அழைப்பு போன்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த போஸ்டர் தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது. விஜய் ரசிகர்கள் உள்பட பல்வேறு தரப்பினரும் இந்த போஸ்டருக்கு ‛கமெண்ட்’ செய்து வருகிறார்கள்.

No comments

Powered by Blogger.