Header Ads

Header ADS

‘மகிழ்ச்சி நாடுகள்’ பட்டியலில் இந்தியா இல்லை; 139வது இடத்திற்கு தள்ளப்பட்டது

–சிறப்பு நிருபர்–

ஐ.நா.,வின் நிலைத்த வளர்ச்சிக்கான தீர்வு குறித்த அமைப்பு நடத்திய ஆய்வில் உலகின் மகிழ்ச்சியான நாடுகள் பட்டியலில் பின்லாந்துக்கு முதல் இடம் கிடைத்துள்ளது. இப்பட்டியலில் 139வது இடத்திற்கு இந்தியா தள்ளப்பட்டுள்ளது.

ஐ.நா.,வின் ஆய்வு

கொரோனா வைரஸ் உலக நாடுகளை முடக்கியுள்ளது. மெதுவாக மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பும் நிலையில் 2வது அலையாக வந்த வைரஸ் பரவல் இறுதிக்கட்டத்தில் உள்ளது. இந்நிலையில், ஆண்டுதோறும் உலகில் மகிழ்ச்சியான நாடு எது என்ற ஆய்வை ஐ.நா.வின் நிலைத்த வளர்ச்சிக்கான தீர்வு குறித்த அமைப்பு நடத்தி வருகிறது.

2021ம் ஆண்டில் இரு அம்சங்களை அடிப்படையாகக் கொண்டு ஆய்வு நடத்தப்பட்டது, முதலாவதாக கொரோனா வைரஸால் மக்களின் வாழ்க்கை தரத்தில் ஏற்பட்ட பாதிப்பு பற்றியும், இரண்டாவதாக கொரோனாவை தடுக்க ஒவ்வொரு நாட்டு அரசும் எவ்வாறு போராடியது என்பதை மதிப்பிட்டு ஆய்வு நடத்தப்பட்டது.

அத்துடன் நாட்டின் வளர்ச்சி, சமூகஆதரவு, தனிநபர் சுதந்திரம், ஊழல், மக்களின் நேர்மறை மற்றும் எதிர்மறை சிந்தனைகள் தொடர்பான கேள்விகளுக்கு பொதுமக்கள் அளித்த பதில்களும் கவனத்தில் கொள்ளப்பட்டன. அதன் அடிப்படையில் மகிழ்ச்சியான நாடுகள் வரிசைப்படுத்தப்பட்டு பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.. 

139 வது இடத்தில் இந்தியா

மொத்தம் 149 நாடுகளில் ஆய்வு நடந்தது. இதில் மகிழ்ச்சியான நாடுகள் பட்டியலில் இந்தியா 139வது இடம் பிடித்துள்ளது. பாகிஸ்தான் 105வது இடத்திலும், வங்காளதேசம் 101வது இடத்திலும், சீனா 84வது இடத்திலும் உள்ளன. கடைசி இடத்தில் ஆப்கானிஸ்தான் உள்ளது. இது மகிழ்ச்சியற்ற நாடாக உள்ளது. லிசோதோ (145), போட்ஸ்வானா (146), ருவாண்டா (147), ஜிம்ப்பாவே (148) வது இடத்திலும், கடைசி இடமான 149ல் ஆப்கானிஸ்தானும் உள்ளது.

பணக்கார நாடான அமெரிக்காவுக்கு 19வது இடம் கிடைத்துள்ளது. முதல் இடத்தில் பின்லாந்து, 2வது இடத்தில் டென்மார்க், 3வது இடத்தில் சுவிட்சர்லாந்து, 4வது இடத்தில் ஐஸ்லாந்து, 5வது இடத்தில் நெதர்லாந்து, 6வது இடத்தில் நார்வே, 7வது இடத்தில் சுவீடன், 8வது இடத்தில் லுக்சிம்போர்க், 9வது இடத்தில் நியூசிலாந்து, 10வது இடத்தில் ஆஸ்திரியா, 11வது இடத்தில் ஆஸ்திரேலியா உள்ளன.

2019ல் இந்தியா 140வது இடத்தில் இருந்தது குறிப்பிடத்தக்கது.


#newsthendral #happycountries  #india #indiaat139thplace

No comments

Powered by Blogger.