Header Ads

Header ADS

20 ஓவர் கிரிக்கெட் போட்டி இந்தியாவில் இருந்து மாற்றம்; எங்கே, எப்போது தெரியுமா


மும்பை, ஜூன்29-

இந்தியாவில் நடைபெறுவதாக இருந்த 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு எமிரேட்சுக்கு மாற்றப்பட்டுள்ளது. அக்டோபர்-நவம்பர் மாதங்களில் போட்டிகள் நடக்கவுள்ளது.

20 ஓவர் உலககோப்பை போட்டி

நடப்பு ஆண்டில் இந்தியாவில் 20 ஓவர் உலககோப்பை கிரிக்கெட் போட்டியை நடத்த பி.சி.சி.ஐ. நடவடிக்கை எடுத்து வந்தது.

ஆனால் கொரோனா மூன்றாம் அலை பரவல் பீதி, நாடுகளுக்கு இடையேயான விமான போக்குவரத்து கட்டுப்பாடு ஆகியவற்றால் இதில் சவால் நீடித்தது.

பாதுகாப்பு கருதி மாற்றம்

இதுகுறித்து பி.சி.சி.ஐ., நிர்வாகிகள் பலகட்டமாக ஆலோசனை நடத்தினர். இந்நிலையில் 20 ஓவர் உலககோப்பை கிரிக்கெட் போட்டியை ஐக்கிய அரபு எமிரேட்சில் நடத்துவதாக பி.சி.சி.ஐ., சார்பில், ஐ.சி.சி.யிடம் நேற்று மாலையில் தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதுபற்றி பி.சி.சி.ஐ., தலைவர் சவுரவ் கங்குலி கூறுகையில்,    ‘‘சுகாதார காரணங்கள் மற்றும் வீரர்கள் பாதுகாப்பு கருதி 20 ஓவர் உலக கோப்பை போட்டியை ஐக்கிய அரபு எமிரேட்சில் நடத்த முடிவு செய்துள்ளோம்.  இதுபற்றி ஐ.சி.சி.,யிடம் தெரியப்படுத்தி உள்ளோம். போட்டி அட்டவணை குறித்த அனைத்து விபரங்களும் விரைவில் வெளியிடப்படும்.ஐக்கிய அரபு எமிரேட்சில் ஐ.பி.எல். நடத்திய அனுபவம் 20 ஓவர் உலககோப்பை போட்டியை சிறப்பாக நடத்த நிச்சயம் எங்களுக்கு கைக்கொடுக்கும்’’ என்றார்.

ஐ.பி.எல்., முடிந்தவுடன் தொடக்கம்

ஏற்கனவே கொரோனா 2ம் அலையால் பாதியில் கைவிடப்பட்ட ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிகள் செப்டம்பர்-அக்டோபர் மாதங்களில் ஐக்கிய அரபு எமிரேட்சில் நடக்க உள்ளது. அதன்படி பார்த்தால் ஐ.பி.எல். முடிந்த சில நாட்களிலேயே 20 ஓவர் உலககோப்பை கிரிக்கெட் போட்டி(அக்டோபர்-நவம்பர்)  அங்கு தொடங்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.