விடுமுறை நாட்களிலும் இனி சம்பளம்; ரிசர்வ் வங்கி புதுஉத்தரவு
புதுடெல்லி, ஜூலை 28-
ஆகஸ்ட் 1 முதல் வங்கிகள் செயல்படாத வார இறுதிநாட்கள் மற்றும் பொதுவிடுமுறை தினங்களிலும் ஊழியர்களுக்கு வங்கி கணக்கு வழியாக சம்பளத்தை பரிமாற்றம் செய்ய வேண்டும் என ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது.
ரிசர்வ் வங்கி நடவடிக்கை
இந்தியாவில் வங்கிகள் செயல்படும் நாட்களில் மட்டுமே சம்பளம்(Salary), ஓய்வூதியம் (Pension) மற்றும் இ.எம்.ஐ., (EMI) சம்பந்தப்பட்டோரின் வங்கி கணக்குகளில் செலுத்தப்படும். வங்கிகள் விடுமுறை எனில் இந்த பணப்பரிவர்த்தணைகள் நடக்காது.
இந்நிலையில் வங்கி விடுமுறை தினங்களிலும் சம்பளம், ஓய்வூதியம், இ.எம்.ஐ.,யை வங்கி கணக்குகளில் செலுத்துவதற்கான நடவடிக்கைகளை ரிசர்வ் வங்கி மேற்கொண்டு வந்தது. ஜூன் மாதம் நடந்த கடன் கொள்கை மீட்பு ஆய்வு கூட்டத்தில் இதுபற்றி விவாதிக்கப்பட்டது.
அனைத்து நாட்களிலும் செயல்பாடு
அதாவது தேசிய தானியங்கி தீர்வு மையம் (National Automated Clearing House, NACH) மூலம் தான் வங்கி கணக்குகளில் ஒரேநேரத்தில் ஊழியர்கள், நிறுவனங்களுக்கு பெருந்தொகை பணப்பரிவர்த்தனை வழியாக மாற்றம் செய்யப்படுகிறது.
தேசிய பணபரிவர்த்தனை கழகத்தின் (National Payments Corporation Of India, NPCI) கீழ் இந்த மையம் செயல்படுகிறது. தொடக்கத்தில் வங்கி செயல்படும் நாட்களில் மட்டும் இயங்கி வந்த NACH இனி ஆண்டின் அனைத்து நாட்களிலும் செயல்பட வேண்டும் என ரிசர்வ் வங்கி உத்தரவு பிறப்பித்துள்ளது.
ஆகஸ்ட் 1 முதல் அமல்
இந்த புதிய நடைமுறை ஆகஸ்ட் 1 முதல் அமலுக்கு வருகிறது. அதன்படி அன்று முதல் வார நாட்கள் மட்டுமின்றி வங்கிகள் இயங்காத வார இறுதிநாட்கள் மற்றும் பொதுவிடுமுறை தினங்களிலும் மாத சம்பளம் மற்றும் ஓய்வூதியம், இ.எம்.ஐ., சம்பந்தப்பட்டோரின் வங்கி கணக்கில் செலுத்த முடியும்.
இதுதவிர NACH வழியாக தான் கியாஸ், மின்சாரம், செல்போன் கட்டணத்திற்கான பணப்பரிமாற்றம் நடப்பதோடு, கடன் (Loan), காப்பீடு(insurance), பரஸ்பர நிதி தவணை (Mutual Funds Premium) கட்டணங்கள் மாற்றம் செய்யப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த செய்தியை படிக்க இங்கே கிளிக் செய்யவும்: காதலிகளை கொன்று கம்மல்கள் சேகரிப்பு; 130 பேரை கொன்ற கொடூரன் தூக்கில் இருந்து தப்பியது எப்படி
வேறு செய்திகள்
* பணக்காரர்கள் பட்டியலில் இந்தியாவிற்கு 3ம் இடம்; போர்ப்ஸ் புள்ளிவிவரம் என்ன சொல்கிறது
No comments