‛ஸ்புட்னிக்-வி’ கொரோனா தடுப்பூசி இந்தியாவில் தயாரிக்க அனுமதி
புதுடெல்லி, ஜூலை 05-
இந்தியாவில் ரஷ்ய தடுப்பூசியான ‛ஸ்புட்னிக்–வி’ தயாரிக்க இமாச்சல் பிரதேசத்தில் உள்ள பானேசியா பயோடெக் நிறுவனத்துக்கு முறையாக அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
‛ஸ்புட்னிக்-வி’ தடுப்பூசி
இந்தியாவில் கொரோனாவை எதிர்கொள்ள கோவிஷீல்டு, கோவேக்சின் தடுப்பூசிகள் போடப்பட்டு வருகிறது.
இதற்குஅடுத்தபடியாக ரஷ்யாவின் ‛ஸ்புட்னிக்–வி’ தடுப்பூசி அறிமுகமாகி உள்ளது. இந்த தடுப்பூசியை இந்தியாவில் கொரோனா அவசர கால பயன்பாட்டுக்காக மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.
தரக்கட்டுப்பாட்டுக்கு பின் அனுமதி
இந்நிலையில் ‛ஸ்புட்னிக்–வி’ தடுப்பூசியை இந்தியாவில் தயாரிக்க திட்டமிடப்பட்டது. இதுதொடர்பாக ரஷ்யன் நேரடி முதலீட்டு நிதியம் மற்றும் இமாச்சல் பிரதேசத்தில் உள்ள பானசியா பயோடெக் நிறுவனம் இடையே ஒப்பந்தம் செய்யப்பட்டது.
அதன்படி முதல் பேட்ச் ‛ஸ்புட்னிக்’ தடுப்பூசியை பானசியா நிறுவனம் தயாரித்து பரிசோதனைக்காக ரஷ்யாவிற்கு அனுப்பியது. இந்த தடுப்பூசிகள் அங்குள்ள காமாலயா ஆய்வகத்தில் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டது. தரக்கட்டுப்பாட்டு சோதனைகளில் தடுப்பூசி வெற்றி அடைந்தது.இதையடுத்து இந்தியாவில் ‛ஸ்புட்னிக்-வி’ கொரோனா தடுப்பூசி தயாரிக்க பானசியா பயோடெக் நிறுவனத்துக்கு முறையான அனுமதி கிடைத்துள்ளது.
No comments