Header Ads

Header ADS

தளபதி விஜயிடம் திருடிய லோகேஷ் கனகராஜ்; எதை தெரியுமா...


சென்னை, ஜூலை, 2–

 ‛மாஸ்டர்’ படத்தில் இளையதளபதி விஜய் அணிந்திருந்த காப்பை அதன் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் திருடியுள்ளார். இதுபற்றி சுவாரசிய தகவல் வெளியாகியுள்ளது.
அதன் விபரம் வருமாறு:-

கலந்துரையாடல் 

இளையதளபதி விஜய் பிறந்தநாளைையொட்டி ரசிகர்கள், இயக்குனர்கள், நடிகர், நடிகைகள் உள்பட பல்வேறு தரப்பினரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

இந்நிலையில் விஜய் பிறந்த நாளையொட்டி அவருடன் பணியாற்றிய இயக்குனர்கள், நடிகர்கள் ‛டுவிட்டர் ஸ்பேஸில்’ கலந்துரையாடினர்.

சுவாரசிய தகவல் பகிர்வு

அப்போது விஜயை வைத்து மாஸ்டர் படம் இயக்கி ‛ஹிட்’  கொடுத்த லோகேஷ் கனகராஜ் சுவாரசியமான தகவல் ஒன்றை பகிர்ந்தார். அதன் விபரம் வருமாறு:-

‛‛நான் இயக்கும் ஒவ்வொரு படத்தின் நினைவாக ஏதேனும் ஒரு பொருளை என்னுடன் வைத்து கொள்ள விரும்புவேன். அதன்படி மாஸ்டர் படத்தில் விஜய் தனது கையில் அணிந்திருந்த காப்பை என்னுடன் வைத்து கொள்ள ஆசைப்பட்டேன்.

எனது விருப்பத்தை விஜயிடம் கூறாமல், படப்பிடிப்பு முடிந்த பிறகு காப்பை தன்னிடம் திரும்ப தரும்படி அவரிடம் கோரி்க்கை வைத்தேன். அதற்கு அவர் உடன்படவில்லை. இதனால் மாற்று வழியில் யோசித்தேன்.

இதை தான் திருடினார்

அதாவது படப்பிடிப்பின் இறுதிநாளில் விஜயிடம் சென்று காப்பை கொடுங்கள் எனது கைக்கு சரியாக இருக்கிறதா என போட்டு பார்த்து கொடுக்கிறேன் என்றேன்.

அவரும் காப்பை கொடுக்க நைசாக அதை எடுத்து வைத்து கொண்டேன். இப்போது என்னிடம் தான் இருக்கிறது. மீண்டும் அவரிடம் கொடுக்கவில்லை’’ என்றார்.

No comments

Powered by Blogger.