Header Ads

Header ADS

நடிகர் அமீர்கானுக்கு 2வது விவாகரத்து; கிரண்ராவ் பிரிவிற்கான காரணம் கசிந்தது


மும்பை, ஜூலை 4–

பிரபல பாலிவுட் நடிகர் அமீர்கான், தனது 2வது மனைவி கிரண் ராவை விவாகரத்து செய்துள்ளார். இதற்கான காரணம் கசிந்துள்ளது.

விவாகரத்து

நடிகர் அமீர்கான் 2005ல் கிரண் ராவ் என்பவரை 2வது திருமணம் செய்தார். இந்த தம்பதிக்கு ஆசாத் என்ற மகன் உள்ளார். 15 ஆண்டுகளுக்குப் பிறகு இவர்களின் இல்வாழ்வில் புயல் வீசி இருக்கிறது. ஆம், அமீர்கான்–கிரண்ராவ் தம்பதி பரஸ்பரம் பேசி விவாகரத்து செய்துவிட்டனர்.

இதுகுறித்து அமீர்கான், கிரண்ராவ் சேர்ந்து வெளியிட்ட அறிக்கை:–

காரணம் என்ன?

15 ஆண்டுகால வாழ்க்கையில் நாங்கள் இருவரும் பெற்ற அனுபவங்கள், மகிழ்ச்சி, சந்தோஷத்தை ஒன்றாக பகிர்ந்து கொண்டோம். எங்களது உறவு, நம்பிக்கை, மரியாதை, அன்பு ஆகியவற்றால் வளர்ந்தது.

தற்போது நாங்கள் வாழ்க்கையில் புது அத்தியாயத்தை தொடங்க உள்ளோம். இதனால்  கணவன், மனைவியாக நீண்ட காலம் தொடர முடியவில்லை. ஆனால் குடும்பத்துக்கான நல்ல பெற்றோராக இருவரும் இருப்போம். தனித்தனியே வாழ்வது தொடர்பாக சில நாட்களுக்கு முன்பு ஆலோசனை நடத்தி பிரிந்துள்ளோம். இவ்வாறு அறிக்கை மூலம் தெரிவித்துள்ளனர்.

முதல் திருமணம்

அமீர்கானின் முதல் மனைவி ரீனா தத்தா. இவர் மூலம் ஜூனைத் என்ற மகன், இரா என்ற மகள் பிறந்தனர். தம்பதியினரிடையே ஏற்பட்ட விரிசலால், இருவரும் 2002ல் விவாகரத்து பெற்றுக்கொண்டனர்.



அதன்பிறகு தான் இயக்குனரும் தயாரிப்பாளருமான கிரண் ராவுடன் ஏற்பட்ட காதலில் அமீர்கான் அவரை திருமணம் செய்தார். 15 ஆண்டுகளுக்குப் பிறகு இதுவும் விவாகரத்தில் முடிந்துவிட்டது.

1 comment:

Powered by Blogger.