Header Ads

Header ADS

ஏ.டி.எம்., சேவை கட்டணம் உயர்வு; ஆக.,1 முதல் அமல்


புதுடெல்லி, ஜூலை 28-

ஏ.டி.எம். இயந்திரங்கள் வழியாக பணம் எடுப்பதற்கான சேவை கட்டணத்தை உயர்த்தி ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. இந்த கட்டண உயர்வு ஆகஸ்ட் 1 முதல் அமலுக்கு வருகிறது.

கட்டணம் உயர்வு

வங்கிக்கு செல்லாமலே நினைத்த நேரத்தில் ஏ.டி.எம். இயந்திரங்கள் மூலம் பணம் எடுத்து வருகிறோம். இதற்கு குறிப்பிட்ட தொகை சேவை கட்டணமாக பிடிக்கப்பட்டு வருகிறது. அதாவது நாம் கணக்கு வைத்திருக்கும் வங்கியின் ஏ.டி.எம். இயந்திரத்தை மாதம் 5 முறை (பணபரிவர்த்தனை, பண இருப்பு உள்ளிட்ட பணபரிவர்த்தனை அல்லாத சேவைகள் சேர்த்து) மட்டும் கட்டணம் எதுவுமின்றி பயன்படுத்த முடியும்.

அதன்பிறகு எடுக்கும் ஒவ்வொரு முறையும் சேவை கட்டணமாக ரூ.15 பிடிக்கப்படுகிறது. இந்த கட்டணம் தற்போது ரூ.17 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இதுதவிர ஏ.டி.எம்., வழியாக பணபரிவர்த்தனை இல்லாத பிற சேவைகளுக்கான கட்டணம் ரூ.5ல் இருந்து ரூ.6 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த கட்டண உயர்வு ஆகஸ்ட் மாதம் 1ந் தேதி முதல் நடைமுறைக்கு வருகிறது.

ஜனவரியில் மீண்டும் அதிகரிப்பு

அதேபோல் பிற வங்கி ஏ.டி.எம்.களை பயன்படுத்தி மெட்ரோ நகரங்களில் மாதம் 3 முறையும், பிற இடங்களில் மாதம் 5 முறையும் எவ்வித கட்டணமும் இன்றி பணம் எடுக்கலாம்.

அதன்பின் பணம் எடுக்கும் ஒவ்வொரு முறையும் ரூ.20 சேவை கட்டணமாக பிடிக்கப்படுகிறது. இந்த கட்டணமும் ரூ.21 ஆக மாற்றம் செய்யப்பட்டுள்ளது.  இருப்பினும் இந்த கட்டண உயர்வு 2022ம் ஆண்டு ஜனவரி முதல் அமலாக உள்ளது.

6 ஆண்டுகளுக்கு பிறகு

ஏ.டி.எம். நிறுவுதல் மற்றும் பராமரிப்பு செலவை கருத்தில் கொண்டு இந்த கட்டண உயர்வுக்கு அனுமதி அளித்துள்ளதாக ரிசர்வ் வங்கி கூறியுள்ளது.

இதற்கு முன்பு கடந்த 2014ல் ஏ.டி.எம்., பணபரிவர்த்தனை தொடர்பான கட்டணம் திருத்தி அமைக்கப்பட்டது. தற்போது 6 ஆண்டுகளுக்கு பிறகு அந்த கட்டண நடைமுறையில் மாற்றம் செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. இந்த செய்தியை படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்:  விடுமுறை நாட்களிலும் இனி சம்பளம் கிடைக்கும். ரிசர்வ் வங்கி புதுஉத்தரவு 

வேறு செய்திகள்

பணக்காரர்கள் பட்டியலில் இந்தியாவிற்கு 3ம் இடம்; போர்ப்ஸ் புள்ளிவிவரம் என்ன சொல்கிறது



No comments

Powered by Blogger.