இந்திய எல்லையில் சீனா சேட்டை; கூடாரங்கள் அமைத்து மீண்டும் அடாவடி
கிழக்கு லடாக் பகுதியில் இந்தியா, சீனா இடையே மீண்டும் பதட்டத்தை பற்ற வைக்கும் சம்பவம் நிகழ்ந்துள்ளது. அங்கு அத்துமீறி சேட்டை செய்துள்ள சீனா, இந்திய எல்லைக்குள் புகுந்து மீண்டும் கூடாரங்களை அமைத்துள்ளது.
எல்லையில் கூடாரங்கள்
இந்திய, சீன எல்லையில் நம் ராணுவ வீரர்கள் ரோந்து பணி மேற்கொண்டனர். அப்போது கிழக்கு லடாக்கின் டெம்சோக் பகுதியில் சார்டிங் நாளா என்னும் இடத்தில் கூடாரங்கள் அமைக்கப்பட்டிருப்பதை கண்டனர். அவற்றை அத்துமீறி சீனா அமைத்திருப்பது தெரிந்தது.
அந்த கூடாரங்களில் சீன மக்கள் இருந்தனர். அவர்களை திரும்பிச் செல்லும்படி இந்திய ராணுவம் அறிவுறுத்தியது. ஆனால் அவர்கள் இதுவரை அங்கிருந்து திரும்பவில்லை என்று கூறப்படுகிறது.
கடுமையான மோதல்
கடந்த ஆண்டு கிழக்கு லடாக் கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் அத்துமீறிய சீன ராணுவம், இந்திய எல்லைக்குள் கூடாரங்களை கட்டியது. இதை அப்புறப்படுத்தும்படி இந்திய வீரர்கள் எச்சரித்தனர். ஆனால் சீனா அடாவடி செய்தது.
இதனால் கூடாரங்களை நம் வீரர்கள் பிரித்தனர். அப்போது கடும் மோதல் ஏற்பட்டது. இதில் நம் வீரர்கள் 20 பேர் வீர மரணம் அடைந்தனர். அதே போல சீன வீரர்கள் 40 முதல் 50 பேர் கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது. அதன் பிறகு பல்வேறு கட்ட பேச்சுக்குப் பிறகு பதட்டம் படிப்படியாக தணிந்தது.
தற்போது மீண்டும் சீனா அத்துமீறி இருப்பது புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
No comments