திருமணத்துக்கு 5 லிட்டர் பெட்ரோல் பரிசளிப்பு; தெலுங்கானாவில் காங்., அறிமுகம்
ஐதராபாத், ஜூலை 29-
தெலுங்கானாவில் நடந்த திருமணம் ஒன்றில் காங்., பிரமுகர் தனது நண்பருக்கு 5 லிட்டர் பெட்ரோலை பரிசாக அளித்தார்.
பெட்ரோல் விலை உயர்வு
இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை தொடர்ச்சியாக உயர்ந்து வந்தது. தற்போது ஒரு லிட்டர் பெட்ரோல், டீசல் ரூ.100 ஐ தாண்டி விற்பனையாகிறது. இதனால் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்துக்கு உள்ளாகியுள்ளனர்.
இந்நிலையில் தெலுங்கானாவில் நடந்த திருமண விழா ஒன்றில் தனது நண்பருக்கு காங்., பிரமுகர் ஒருவர் 5 லிட்டர் பெட்ரோலை பரிசாக அளித்தார். அதன் விபரம் வருமாறு:
5 லிட்டர் பெட்ரோல்
தெலுங்கானாவில், தெலுங்கானா ராஷ்ட்ர சமீதி(TRS) கட்சியின் ஆட்சி நடைபெறுகிறது. சந்திரசேகர ராவ் முதல்-அமைச்சராக உள்ளார். இக்கட்சியின் பிரமுகரான சையத் ராயத்துக்கு திருமணம் நடந்தது.
சங்கரரெட்டி மாவட்டம் கோஹிரில் நடந்த திருமண வரவேற்பில் சையத் ராயத்துக்கு அவரது நண்பரும் காங்கிரஸ் பிரமுகருமான மொஹாசீன் 5 லிட்டர் பெட்ரோலை மேடையில் பரிசாக அளித்தார். இதுதொடர்பான வீடியோ தற்போது வைரலாகியுள்ளது.
நடுத்தர மக்கள் பாதிப்பு
இதுபற்றி மொஹாசீன் கூறுகையில், ‛‛தினந்தோறும் பெட்ரோல் விலை உயர்கிறது. தெலுங்கானாவில் பெரும்பாலான இடங்களில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.105 யை தொட்டுள்ளது. இதனால் நடுத்தர மக்கள் அதிகமாக பாதிக்கப்படுகின்றனர். இதை மத்திய, மாநில அரசுகளுக்கு உணர்த்தவே நண்பருக்கு பெட்ரோல் பரிசளித்து உள்ளேன்’’ என்றேன். மேலும் இந்த செய்தியை படிக்க இங்கே கிளிக் செய்யவும்: மோடியை கலங்கடித்த வங்கபுயலின் டெல்லி பயணம்; சோனியாவை சந்தித்து வியூகம் வகுத்த மம்தா
பிற செய்திகள்
* பணக்காரர்கள் பட்டியலில் இந்தியாவிற்கு 3ம் இடம்; போர்ப்ஸ் புள்ளிவிவரம் என்ன சொல்கிறது
🤣🤣
ReplyDelete