கொரோனா தாக்கி பெண்ணாக மாறிய ஆண்; இந்தோனேசியாவில் அதிர்ச்சி சம்பவம்
ஜகார்த்தா, ஜூலை 24-
கொரோனா பாதிப்பு
இந்தோனேசியாவில் உள்ள மாலுகு மாகாணம் டெர்னெட் பகுதியை சேர்ந்தவர் டிஎம். இவர் அந்நாட்டின் தலைநர் ஜகார்த்தாவில் இருந்தார். அங்கு அவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டார். இது மருத்துவ பரிசோதனையில் உறுதியானது.
இந்நிலையில் ஜகார்த்தாவில் இருந்து சொந்தஊரான டெர்னெட்டுக்கு செல்ல விரும்பினார். அங்கு விமானத்தில் பயணிக்க ஆர்.டி.பி.சி.ஆர். பரிசோதனையில் கொரோனா இல்லை என்ற சான்றிதழ் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதனால் அவர் மாற்றுவழியில் சிந்தித்தார்.
பெண்ணாக மாறினார்
அதாவது அவரது மனைவி சமீபத்தில் கொரோனா பரிசோதனை செய்தார். அவருக்கு பாதிப்பு உறுதியாகவில்லை. அவருக்கு கொரோனா பாதிப்பில்லை எனும் சான்றிதழ் வழங்கப்பட்டது. இதை பயன்படுத்தி விமானத்தில் பயணிக்க திட்டமிட்டார். அதன்படி அவர் தனது மனைவியின் பெயர், கொரோனா பாதிப்பில்லை சான்று, அடையாள அட்டை ஆகியவற்றை கொண்டு விமான டிக்கெட் முன்பதிவு செய்தார். அதன்பின் புர்கா(முஸ்லிம் பெண்கள் அணியும் உடை) அணிந்து விமான நிலையம் சென்றார். அதிகாரிகளின் ஆவண சோதனைக்கு பிறகு ‛சிட்டிலிங்க்’ எனும் விமானத்தில் ஏறி அமர்ந்தார்.
ஜகார்த்தா சர்வதேச விமான நிலையத்தில் இருந்து விமானம் புறப்பட்டது. சிறிது நேரத்தில் விமான கழிவறை சென்ற அவர் புர்காவை கழற்றிவிட்டு ஆண்கள் அணியும் உடையுடன் திரும்பினார். இதை பார்த்து சந்தேகம் அடைந்த விமான பணியாளர்கள் முழுவிசாரணை நடத்தினர்.
கலைந்த வேடம்
விசாரணையில் அவருக்கு கொரோனா உறுதியானதும், சொந்தஊர் செல்வதற்காக பெண் வேடத்தில் மனைவியின் பெயரில் விமானத்தில் பயணிப்பதும் தெரியவந்தது.
இதையடுத்து சொந்தஊரான டெர்னெட்டில் இறங்கி வீட்டுக்கு செல்ல வேண்டிய அவர் ஆம்புலன்சில் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்படார். அங்கு அவரை மீண்டும் கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்தினர்.
இதில் அவருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகவே வீட்டு தனிமையில் வைத்துள்ளனர். மேலும் அவர் மீது வழக்குப்பதிந்த போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
No comments