Header Ads

Header ADS

காதலிகளை கொன்று கம்மல்கள் சேகரிப்பு; 130 பேரை கொன்ற கொடூரன் தூக்குக்கு முன்பே இறந்தான்

 

கலிபோர்னியா, ஜூலை, 27-

அமெரிக்காவில் காதலிகளை கொன்று கம்மல்கள் சேகரித்த கொடூரன் தூக்கு தண்டனை நிறைவேற்றப்படும் முன் இறந்துபோனார். இவர் 130 பேரை கொன்றதாக குற்றம்சாட்டப்பட்டது குறிப்பிடத்தக்கது.

‛டேட்டிங் கேம்’ புகழ் பெற்றவர்

அமெரிக்காவில் வசித்தவர் ரோட்னி ஜேம்ஸ் அல்காலா 77. சிறந்த புகைப்பட கலைஞரான இவர் ‛ஸ்கை டைவிங்’ செய்வதிலும் மோட்டார் சைக்கிள் பந்தயத்திலும் வல்லவர். 1978 ம் ஆண்டில் ‛டேட்டிங்கேம்’ எனும் ‛ரியாலிட்டி ேஷா’ மூலம் புகழின் உச்சிக்கு சென்றார்.

இந்நிலையில் தான் அமெரிக்கவில் கலிபோர்னியாவில் 1977 முதல் 1979 ம் ஆண்டுக்குள் 12 வயது சிறுமி உள்பட 5 பேரை அல்காலா கொன்றதாக புகார் எழுந்தது. அவரை கைது செய்த போலீசார் சான்பிரான்சிஸ்கோவில் உள்ள சான் குயின்டின் சிறையில் அடைத்தனர்.

தூக்கு தண்டனை

வழக்கு விசாரணை கோர்ட்டில் நடைபெற்று வந்தது. 5 பேரை கொலை செய்ததால் அவருக்கு 2010ம் ஆண்டில் கோர்ட்டு தூக்கு தண்டனை விதித்தது. இதனால் அவர் தொடர்ந்து சிறையில் இருந்தார். இதற்கிடையே மேலும் அவர் மீது கொலை குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டன.

இதுதொடர்பாகவும் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். இந்நிலையில் நியூயார்க் நகரில் இரு பெண்களை கொன்ற வழக்கில் 2013ல் அவருக்கு 25 ஆண்டு சிறை தண்டனையும் வழங்கப்பட்டது. அதன்பின் 1977 ல் சவுத்வெஸ்ட் வோமிங்கில் 28 வயது கர்ப்பிணியை கொலை செய்ததும் டி.என்.ஏ., பரிசோதனை மூலம் உறுதியானது. இந்த வழக்கிலும் 2016ல் அவருக்கு தண்டனை வழங்கப்பட்டது.

130 பேரை கொன்றதாக...

இந்த வழக்கு விசாரணைகளின் போது அல்கலா பற்றிய திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. அதாவது அவர் ஒரு ‛சைக்கோ’ கொலைக்காரர். பெண்களிடம் காதலிப்பதாக கூறி அவர்களுடன் உல்லாசமாக இருப்பார். பின்னர் புகைப்படம் எடுத்து தருவதாக தனது வீட்டுக்கு அழைத்து சென்று ஆபாசமாக படம் பிடித்து கொலை செய்வதை வாடிக்கையாக கொண்டுள்ளார்.

இவர் மீது சுமர்த்தப்பட்ட 8 வழக்குகள் ஆதாரங்களுடன் நிரூபிக்கப்பட்ட நிலையில் மொத்தம் அவர் 130 பேரை கொலை செய்திருக்கலாம் என்ற வாதம் கோர்ட்டில் முன்வைக்கப்பட்டது. இதில் பெரும்பாலானவர்கள் பெண்கள் ஆவார்கள். அவர்களை காதல் வலையில் வீழ்த்தி கொடூரமாக கொலை செய்துள்ளார். இருப்பினும் 120க்கும் அதிகமானோரின் உடல்கள் கிடைக்காததால் அதை நிரூபிக்க முடியவில்லை. இதனால் அவர் எத்தனை பேரை கொலை செய்தார் என்பதையும் சரியாக கணிக்க முடியவில்லை.

கம்மல்கள் சேகரிப்பு

மேலும் அல்கலா ஒரு விசித்திரமான பழக்கத்தை கொண்டுள்ளார். அதாவது அவர் இருவழிகளில் தான் கொலையை அரங்கேற்றுவார். பெரும்பாலும் கழுத்தை நெரித்து கொலை செய்வதையும், சிலநேரம் சுத்தியலால் தலையில் அடித்து கொல்வதையும் பழக்கமாக கொண்டிருந்தார்.

அத்துடன் கொலை செய்ததை சாதனையாக நினைத்து கொள்ளும் அவர் பெண்கள் அணிந்திருக்கும் கம்மல்களை சேகரித்து லாக்கரில் பத்திரப்படுத்தினார். கம்மல்கள் மற்றும் அவர் எடுத்து வைத்திருந்த 100க்கும் அதிகமான ஆபாட படங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

இதனால் கோர்ட்டில் இவரை அரசு வக்கீல் மாட் முர்பி, ‛இதோ நிற்கும் இந்த நபர் சாதாரணமாவர் இல்லை. இரக்கமற்ற கொடூரமான மனிதன். பெண்களிடம் பழகி வேட்டையாடும் குணம் கொண்டவர்’ என குறிப்பிட்டது உண்டு.

சிறையில் சாவு

இந்நிலையில் சான் குயின்டின் சிறையில் இருந்த அல்கலா கடந்த சில ஆண்டுகளாக உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்தார். இதனால் மருத்துவ வசதி நன்கு உள்ள கார்கோரான் சிறையில் அடைக்கப்பட்டார்.

அங்கு அவருக்கு அடிக்கடி மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இருப்பினும் 2 நாட்களுக்கு முன்பு சிகிச்சை பலனின்றி அல்கலா இறந்தார். வக்கிர புத்தியுடன் பலரை வதம் செய்த இந்த அல்கலாவுக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றும் முன்பே இயற்கையாக இறந்ததாக சிறை நிர்வாகம் கூறியுள்ளது. இதை படிக்க இங்கே கிளிக் செய்யுங்க: நடிகர் விஜய்க்கு சென்னையில் முழுஉருவ சிலை திறப்பு; பரிசளித்தது யார் தெரியுமா...

வேறு செய்திகள்

பணக்காரர்கள் பட்டியலில் இந்தியாவிற்கு 3ம் இடம்; போர்ப்ஸ் புள்ளிவிவரம் என்ன சொல்கிறது




* மத்திய ஆயுதப்படையில் 25,271 பணியிடங்கள் நிரப்ப முடிவு... மாத சம்பளமாக ரூ.69,100 கிடைக்கும்... 10ம் வகுப்பு படித்திருந்தால் போதும்... 31.08.2021க்குள் விண்ணப்பிக்கலாம்... 

மாத சம்பளம் ரூ.35 ஆயிரத்தில் நபார்டு வங்கியில் 162 காலி பணியிடங்கள்... 2021 ஆகஸ்ட் மாதம் 7 ந் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

No comments

Powered by Blogger.